பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பதினெண் புராணங்கள் செய்தான். அவன் தாய் ஆகாயத்தில் தோன்றி, "மகனே! நான் முழுத் திருப்தி அடைந்து விட்டேன். இதோ மோட்சம் போகிறேன்” என்று கூறி மறைந்தாள். 'நந்தி தீர்த்தம் இவ்வளவு சிறப்புப் பெற்றதற்கு ஒரு காரணம் உண்டு. முன்னொரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் சிவனை நோக்கி மிகக் கடுமையான தவம் செய்தாள். அப்படி தவம் செய்த இடம்தான் 'நந்தி தீர்த்தம்.' அத்ரிஈசுவர தீர்த்தம் கமதா என்றொரு வனாந்திரம் இருந்தது. அங்கு 100 ஆண்டுகளாக மழை பெய்யாததால் மரங்கள் கருகி அங்குள்ள உயிரினங்கள் மிகவும் துன்புற்றன. அவ்வனத்தில் அத்ரி முனிவரும் அவர் மனைவி அனுசுயாவும் வாழ்ந்து வந்தனர். மழை வேண்டி சிவனைக் குறித்து அத்ரி தவம் இயற்றினார். அன்ன ஆகாரமின்றி அவர் தவம் இயற்றுவதைப் பார்த்து அனுசுயாவும் சிவனைப் பார்த்துத் தவம் இயற்றினாள். 54 ஆண்டுகள் தவம் நீண்டது. திடீரென்று அத்ரிக்கு அதிக தாகம் எடுக்கவே அனுசுயாவைப் பார்த்து, “எங்காவது சென்று கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா!” என்றார். குடத்தை எடுத்துக் கொண்டு காட்டினுள் சென்ற அனுசுயாவின் எதிரே ஒரு பெண் வந்தாள். அப்பெண் இவளைப் பார்த்து, 'அனுசுயா! நான்தான் கங்கா தேவி. உன் தவத்திற்கு மிகவும் மெச்சினேன். வேண்டும் வரத்தைக் கேள்” என்று சொன்ன வுடன், அனுசுயா அப்பெண்ணைப் பார்த்து, “நீதான் கங்கை என்றால் இங்கே ஒரு குளத்தை உண்டாக்கி அதை கங்கை நீரால் நிரப்புக!” என்றாள். அவ்வாறே நடந்தது. அனுசுயா குடம் நிறைய அந்நீரை எடுத்துக் கொண்டு கணவனிடம் சென்றாள். அதைக் குடித்துப் பார்த்த அத்ரி முனிவர். "இது நாம் வழக்கமாகச் சாப்பிடும் தண்ணீர் இல்லையே, எங்கே