பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாயு புராணம் 157 கிடைத்தது?" என்றார். நடந்ததைக் கூறிய அனுசுயாவுடன் குளக்கரைக்குச் சென்றார். அங்கு இருந்த கங்கையைப் பார்த்து, "தாயே! நீ இங்கேயே இருக்க வேண்டும்’ என்று வேண்டினார். கங்கையும் ஒப்புக் கொண்ட பிறகு சிவன் அனுசுயாவிடம் “உன் தவத்திற்கு மெச்சினேன்; வரம் என்ன வேண்டும்?” என்று கேட்க, "தாங்களும் இந்த வனத்திலே தங்கிவிட வேண்டும்” என்று அனுசுயா வேண்ட சிவனும் ஒப்புக் கொண்டார். சிவனும் கங்கையும் தங்கிய இந்த இடத்திற்கு “அத்ரிஈசுவர தீர்த்தம்” என்ற பெயர் வந்தது. ஜோதிர்லிங்கங்களின் கதை : 1. சோமநாதர் தட்சனுடைய 27 பெண்களையும் மணந்துகொண்ட சந்திரன் சோமன்). அவர்களுள் ரோகிணியிடம் அதிக அன்பு பாராட்டி மற்றவர்கள் மனம் வருந்துமாறு செய்துவிட்டான். அந்தப் பெண்கள் தங்கள் தந்தையாகிய தட்சனிடம் சென்று முறையிட்டனர். தட்சன் எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று பலமுறை சந்திரனை எச்சரித்தும் அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ரோகிணி யிடம் இருந்துவிட்டான். கோபம் கொண்ட தட்சன் சந்திரனைப் பார்த்து “நீ தேய்ந்து (rணித்து) போவாயாக’ என்று சாபமிட்டான். பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் சென்று முறையிட்டான். பிரம்மன் "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை. நீ சிவனிடம் சென்று முறையிடுக!” என்று அறிவுரை கூறினான். சோமன் சரசுவதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறு மாதங்கள் தீவிரமாக வழிபட்டான். சிவன் நேரில் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். சோமன் நடந்த வற்றைக் கூறி தன்னைக் காக்குமாறு வேண்டினான். செய்த