பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பதினெண் புராணங்கள் தவறுக்குத் தண்டனையாக வழங்கப்பட்ட சாபத்தைப் போக்க முடியாது என்று கூறிய சிவன், "இதற்கு ஒரு வழி காணலாம். கிருஷ்ணபட்சம் 14 நாட்களும் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்து (rணித்து) போவாயாக சுக்கிலபட்சம் 14 நாட்களும் நீ வளர்ந்து முழுவடிவம் பெறுமாறு நான் வரம் தருகிறேன்” என்றார். அதிலிருந்து சந்திரன் தேய்வதும், வளர்வதும் நிலைத்து விட்டன. சோமன் வழிபட்ட இடம்தான் சோமநாதர் இருக்குமிடம். 2. மல்லிகார்ஜுனர் தனக்கு முன்னர் கணேசனுக்குத் திருமணம் ஆகி விட்டதால் பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கோபம் கொண்ட கார்த்திகேயன், கிரெளஞ்ச மலையில் வந்து தங்கினான். பெற்றோர்கள் மகனைப் பிரிந்த துயரத்தால் அடிக்கடி பார்க்க வந்த பொழுது, கார்த்திகேயன் அவர்களை நெருங்க விடவில்லை. தூரத்தில் இருந்து அடிக்கடி வருவது கஷ்டம் என்பதால், கிரெளஞ்ச மலைக்கு மிகச் சமீபத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனத்தில் சிவனும், பார்வதியும் வந்து தங்கினர். 3. மகாகாளர் சிப்ரா நதிக் கரையில் உள்ள அவந்தியில் வேதப்பிரியா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தேவப்பிரியா, பிரியமேதா சுவரிதா, சுவரதா என்ற 4 பிள்ளைகள் இருந்தனர். இந்த பிராமணன் வேத வழியைப் பற்றி சிவனை வழிபட்டதோடு, தன் பிள்ளைகளையும் அதே வழியில் பழக்கி இருந்தான். இவர்கள் வாழ்ந்த இடத்திற்குப் பக்கத்தில் ரத்னமலை' என்று ஒரு மலை இருந்தது. அம்மலையில் துஷ்ணன் என்ற ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். இந்த பிராமணர்கள் சிவ வழிபாடு செய்வது அவனுக்குப் பிடிக்க