பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii பட்டிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பல்வேறு தவறுகளைச் செய்த ஒருவன் இவற்றை ஒருமுறை படித்து விட்டால் தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைவான் என்று சொல்வது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைப்பைத் தருவதாகும். ஒருவன் செய்த குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என்பது இந்த நாட்டின் வினைக் கொள்கையோடு (Kama theory) மாறுபட்டதாகும். அப்படியிருக்க இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன? எத்தகைய குற்றம் செய்தவனும் முழு நம்பிக்கையோடு, ஈடுபாட்டுடன் இப்புராணங்களைக் கேட்பானாயின் அவன் தன் பிழைகளுக்கு வருந்துவான். மேற்கொண்டு அத்தகைய தவறுகளைச் செய்யமாட்டான் என்பதே அடிப்படைக் கருத்தாகும். இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால், புராணங்களின் அடிப்படையைத் தவாறகப் புரிந்துகொள்ள நேரிடும். கொனாரக்கில் உள்ள சூரியன் சிலையையும், புருஷோத்தம நகரிலுள்ள சிவன், விஷ்ணு சிலைகளையும் ஒருமுறை தரிசித்தால், தீர்த்தங் களில் ஒருமுறை குளித்தால் எல்லாப் பாவங்களும் போய் விடும் என்று சொல்வதன் கருத்தும் இதுவேயாகும். இடைக் காலத்திலும், பிற்காலத்திலும் புராணங்கள் அதிகம் பயிலப்படாத காலத்தில் சில புதுமைகள் நிகழ்ந்தன. ஏறத்தாழ எல்லாப் புராணங்களும் குப்தர் பரம்பரைக் காலத்தோடு முடிவடைந்து விட்டன. ஆனால் அவ்வப் பொழுது அந்தந்தப் பிராந்தியங்களில் இடைச் செறுகல்கள் நுழையாமல் இல்லை. வடமொழியில் சுலோகங்கள் இயற்றக் கூடிய பிராமணர்கள், பெளராணிகர்கள் என்பவர்களின் தயவால் இடைச் செறுகல்கள் புராணங்களில் புகுத்தப் பெற்றன. இந்த விநோதமான நிகழ்ச்சி 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிவரை நடைபெற்றது என்பதற்கு பவிஷ்ய புராணமே தக்க சான்றாகும். பவிஷ்யம் என்ற சொல்லிற்கு