பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பதினெண் புராணங்கள் அறுத்து அக்னியில் போட்டான். ஒரு தலை மிஞ்சி இருக்கும் பொழுது சிவன் தோன்றினார். "போதும் நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார். “யாவரையும் வெல்லும் வலிமையையும், எரிந்துபோன ஒன்பது தலைகளும் வேண்டும்” என்று கேட்டான். சிவன் அப்படியே கொடுத்தார். குழி வெட்டிய இடத்தில் இருப்பவர்தான் ஒன்பதாவது ஜோதிர்லிங்கமாகிய வைத்தியலிங்கம். மிக்க மகிழ்ச்சியோடு இராவணன் இலங்கையில் இருக்கும்போது அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள், நாரதரை ஏதாவது வழி செய்யுமாறு வேண்டினர். உடனே நாரதர் இலங்கைக்குச் சென்று இராவணனைச் சந்தித்து “சிவனுடைய வரங்களுக்கு இவ்வளவு மதிப்புத் தர வேண்டாம். இவ்வரங்கள் உண்மையா என்று சோதிக்க ஒரு வழி உண்டு. சிவன் அமர்ந்திருக்கும் கைலை மலையை நீ தூக்கிப் பார்” என்று சொன்னார். இராவணன் அப்படிச் செய்ய, "உன்னை அழிக்க ஒரு மனிதன் தோன்றுவான்” என்று சிவன் சாபம் கொடுத்தார். 10. நாகேச லிங்கம் மேலைக் கடற்கரையில் தாருகன் என்ற அரக்கனும், அவன் மனைவியாகிய தாருகியும் வாழ்ந்து வந்தனர். பார்வதியிடத்தில் அவள் பெற்ற வரத்தினால் அவள் எங்கே சென்றாலும், ஒரு பெரிய காடு அவள் பின்னேயே செல்லும். இந்த வர பலத்தால் நல்லவர்கள் இருக்கும் இடம், வேள்விகள் நடக்கும் இடம் ஆகியவற்றிற்குத் தாருகி சென்று அந்த இடமெல்லாம் காடாக ஆக்கி அவர்களை அழித்து வந்தாள். இந்நிலையில் அச்சமடைந்த தேவர்கள் அவுர்வா என்ற முனிவரிடத்தில் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டினர். முனிவர்,