பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 - பதினெண் புராணங்கள் சிவபிரான் வெளிப்பட்டு, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்க, “அசுரர்களை அழிப்பதற்கு ஒர் ஆயுதம் வேண்டும்” என்று கேட்டார். சிவபிரான் மகிழ்ந்து சுதர்சன சக்கரத்தைத் தந்தார். சிவராத்திரி விரதம் முன்னொரு காலத்தில் ருருத்ரகா என்ற வேடன் காட்டில் வாழ்ந்து வந்தான். கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவதும் அவன் தொழிலாகும். அவனுக்கு யாரிடமும் கருணை காட்டிப் பழக்கமும் இல்லை. ஒருமுறை அவனுடைய குடும்பத்தினர் மிகவும் பசியால் வருந்தியபொழுது அவனிடம் "என்தயா வது வேட்டையாடிக் கொண்டு வா” என்றனர். வேடன் வேட்டையாடப் புறப்பட்டான். எந்த விலங்கும் கிடைக்காமை யால் நீர் நிறைந்த குட்டையின் பக்கத்தில் நின்ற அவன் எப்படியும் ஏதாவது ஒரு மிருகம் தண்ணிர் குடிக்க வரும், பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, ஒரு குடுவையில் தண்ணிர் நிரப்பிக் கொண்டு பக்கத்தில் உள்ள மரத்தில் அமர்ந்து கொண்டான். அது ஒரு வில்வ மரம். எனவே அதனடியில் ஒரு லிங்கம் இருப்பதே அவனுக்குத் தெரியாது. அன்று சிவராத்திரி என்பதும் தெரியாது. பொழுது சாய்ந்ததும் ஒரு பெண்மான் நீர் குடிக்க வந்தது. பெருமகிழ்ச்சி அடைந்த வேடன் தன்னுடைய வில்லைக் கையிலெடுத்தான். அவனுடைய குடுவையில் இருந்த நீர் கொஞ்சம் கீழே விழுந்தது. அவன் அசைந்து எழுந்ததால் மரத்தில் உள்ள வில்வங்கள் கீழே விழுந்தன. இவை இரண்டும் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் குறிபார்த்தபொழுது, அந்தப் பெண் மான் கூறிற்று: "வேடனே, என்னை இப்போது கொல்ல வேண்டாம். என் கணவரும் பிள்ளைகளும் காத்துக்