பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 171 சிவன் அணியும் விபூதி ஒரு காலத்தில் பிருகுவின் பரம்பரையில் வந்த பிராமணர் மிகக் கடுமையான ஒரு தவத்தை மேற்கொண்டார். அவர் தவ வலிமையால் சுற்றிலும் உஷ்ணம் பரவியது. அதன்மேல் மேகம் மழையைப் பொழிந்தது. இந்த உஷ்ணமோ, நீரின் குளிர்ச்சியோ அந்த பிராமணனை ஒன்றும் செய்யவில்லை. தவம் தொடர்ந்தது. கொடிய விலங்குகளில் இருந்து மான் வரை அவரிடம் அச்சமின்றி அன்போடு பழகின. பசி எடுக்கும்போது பிராமணன் அந்த விலங்குகளைப் பார்த்து, "சாப்பிட ஏதாவது கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, உடனே அந்த மிருகங்கள் அவனுக்குத் தேவையான மாமிசத் தைக் கொண்டு வந்து கொடுத்தன. தவம் மேலும் தொடரவே, மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டுப் பச்ை இலைகளைச் சாப்பிடத் தொடங்கினார். பச்சை இ - வடமொழியில் பர்னா என்று பெயர். ஆதலால், அதைத் தின்னும் பிராமணர் பிரன்னதா என்று அழைக்கப்பட்டார். மேலும் தவம் தொடர்ந்தது. ஒரு நாள் பிராமணத் தவசி புல்லறுக்கும் கத்தியைக் கொண்டு புற்களை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது அந்தக் கத்தி அவர் நடுவிரலை வெட்டி விட்டது. என்ன அதிசயம்? இரத்தம் வருவதற்குப் பதிலாக வெட்டுண்ட விரலில் இருந்து செடி, மரம் முதலிய வற்றிற்கு உள்ளே இருக்கும் தாவர உயிர்ச்சாறு போன்ற ஒரு திரவம் காயத்தின் வழியே கசியத் துவங்கியது. பிராமணர் தான் மிகப் பெரிய நிலையை அடையத் துவங்கி விட்டதாகவும், இரத்தத்திற்குப் பதிலாக தாவர உயிர்ச்சாறு தன் உடம்பில் ஒடுகிறது என்றும் குதிக்கத் தொடங்கிவிட்டார். இதைப் பார்த்த சிவன் இவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கருதி பிராமணன் வடிவம் கொண்டு இந்தப் பார்ப்பனன் எதிரே