பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பதினெண் புராணங்கள் வந்தார். இவனைப் பார்த்து, “என்ன ஆனந்தம் உனக்கு? ஏன் இப்படித் துள்ளித் துள்ளிக் குதிக்கிறாய்?" என்று கேட்டார். பிராமணத் தவசி நடந்தவற்றைக் கூறித் தவத்தின் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டேன். அதனால்தான் குதிக்கிறேன்" என்றான். இதைக்கேட்ட பிராமண சிவன், "பூ! இவ்வளவு தானா? இன்னும் உன்னுடைய உடம்பில் நீர்ச்சத்துதானே இருக்கிறது. என்னுடைய உடம்பைப் பார்!’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய விரலை வெட்டிக் கொண்டார். அதிலிருந்து விபூதி பொலபொலவெனக் கொட்டியது. பிராமணன் அகந்தை அடங்கியது. அதிலிருந்து சிவன் மேனி எல்லாம் விபூதி விளங்கத் தொடங்கியது. கெளரியின் கதை பார்வதி நீல நிறத்தோடு இருந்ததால் சிவன் அவளைக் காளி என்றே அழைத்தார். பார்வதிக்கு இது பிடிக்கவில்லை. ஏன் நான் கறுப்பாக இருக்கிறேன் என்று சுட்டிக் காட்டு கிறீர்கள். என்னை விரும்புவது போல் பாசாங்கு செய்து ஏன் என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்? இந்த நிறம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் பிரம்மனை நோக்கித் தவம் செய்து இந்த நிறத்தை மாற்றிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு பிரம்மனை நோக்கித் தவம் செய்தாள். பிரம்மன் எதிர்ப்பட்டு, “என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, இந்த நீல (கறுப்பு நிறத்தை ஒழித்துவிட்டு நான் கெளரியாக வேண்டும் என்று கூறினார். பிரம்மன் வருவதற்கு முன்பே பார்வதியின் எதிரே ஒரு கொடிய புலி அவளை உண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் எதிரே படுத்திருந்தது. தன்னிடம் அன்பு பாராட்டுகிறது என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்த பார்வதி புலியின் உடம்பினுள் பிரவேசித்தாள்.