பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 173 அவளுடைய சக்தி உள்ளே புகுந்ததால் புலி மிகச் சாதுவான பிராணியாக மாறி அவளுடனேயே இருந்து விட்டது. பிரம்மன் பார்வதியைப் பார்த்து, “நீ விரும்பியதை அடைவாய்” என்று கூறியவுடன் பார்வதியின் மேனியிலிருந்து கறுப்பு நிறம் முழுவதும் கீழே உதிர்ந்து விட்டது. அக் கறுப்பை எல்லாம் ஒன்றாகத் திரட்டி பிரம்மன் எடுத்துக் கொண்டான். அவன் வேண்டியதும் அதுதான். காரணம் வருமாறு: இரண்டு அரக்கர்கள்- கம்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, பிரம்மன் எதிர்ப்பட்ட வுடன் எந்த ஆண் மகனும் தங்களைக் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றனர். அதன்பிறகு அவர்கள் செய்த கொடுமைக்கு அளவே இல்லை. பிரம்மன் சிவபெருமானிடம் சென்று, நடந்தவற்றைக் கூறிப் பார்வதியின் ஆற்றலின் ஒரு பகுதியைப் பெண்ணாக்கித் தந்தால் சும்ப, நிசும்பர்களை அழிக்க முடியும் என்று வேண்டிக் கொண்டார். பிரம்மனின் இவ் வேண்டுகோளுக்கு இணங்கவே பார்வதியைத் தவம் செய்யுமாறு அனுப்பினார் சிவன். கீழே விழுந்த கறுப்பை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி கெளசிகி என்ற பெயருடன், பிரம்மனிடம் ஒப்படைத்தார். பார்வதியின் அம்சமாக அவள் இருந்தாள். அவளைக் கொண்டே சும்ப, நிசும்பர்களை அழிக்கச் செய்தான் பிரம்மன். கெளரியாக மாறியவள் புலியையும் அழைத்துக் கொண்டு சிவனிடம் சென்றாள். அப்புலியை ஒர் ஆணாக மாற்றி நந்திக்குத் துணையாக சோமநந்தி என்ற பெயருடன் இருக்கச் செய்தார் சிவன். உபமன்யுவின் கதை முன்னொரு காலத்தில் வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர்) என்ற முனிவருக்கு உபமன்யு என்ற ஒர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்த பொழுது தனக்குப் பால்