பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 175 நீண்ட காலம் கழித்து கிருஷ்ணன் உபமன்யுவைப் பார்க்க வந்தார். உபமன்யு சிவனைக் குறித்த பல ரகசியமான மந்திரங் களையும் கிருஷ்ணனுக்கு உபதேசித்தார். அந்தகாசுரன் கதை முன்னொரு காலத்தில் சிவன் தனியே அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியாமல் மெதுவாகப் பின்புறமாக வந்த பார்வதி அவருடைய இரண்டு கண்களையும் பொத்தி விட்டாள். சிவனின் கண்ணைப் பொத்தியதால் பார்வதியின் உடம்பில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்றாகக் கூடி அரக்கனாக உருவாகிக் கூப்பாடு போட்டது. சிவன் கண்களை விடுவித்துக் கொண்டு 'யார் உறுமியது? என்று கேட்டார். கரிய அரக்கன் ஒருவன் கண்கள் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்தான். சிவனுடைய கண்கள் பொத்தப்பட்ட நிலையில், இந்த அரக்கன் பிறந்ததால், அந்தகனாகவே (குருடனாகவே) இருந்தான். அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. ஹிரண்ய நேத்திரன் என்ற அரசன் தனக்கொரு பிள்ளை வேண்டுமென்று சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றி னான். சிவன் தோன்றி, "உனக்கென்று பிள்ளை பிறக்கும் பாக்கியமில்லை. எனவே நான் அவ்வரத்தைத் தரமுடியாது. என்றாலும், அந்தகனாகப் பிறந்த அசுரன் என்னிடம் இருக்கிறான். அவனை வேண்டுமானால் நீ பிள்ளையாக எடுத்துக் கொண்டு வளர்க்கலாம்” என்று சொன்னார். ஹிரண்ய நேத்திரன் மிக்க மகிழ்ச்சியோடு அந்தகாசுரனை எடுத்து வளர்த்தான். ஹிரண்ய நேத்திரன் சிவனைக் குறித்துப் பெரும் தவம் செய்து யாராலும் வெல்ல முடியாத வரங்களைப் பெற்று