பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பதினெண் புராணங்கள் தேவருலகை வென்று, தேவர்களை அங்கிருந்து விரட்டி விட்டான். கடைசியில் பூமியையே சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் வைத்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்று அவனைத் தன் கொம்பினர்ல் குத்திக் கொன்று விட்டு பூமியைத் தன் கொம்புகளுக்கு இடையே வைத்து மேலே கொண்டு வந்து அது இருக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டார். பிறகு ஹிரண்ய நேத்திரன் மகனாகிய அந்தகாசுரனை அரசனாக்கி விட்டார். இது நிகழ்ந்த பிறகு ஹிரண்ய நேத்திரன் தம்பியாகிய ஹிரண்ய கசிபு பெரு வரங்களைப் பெற்றுத் தன்னை யாரும் கொல்லமுடியாத சக்தி பெற்றதால், தேவர்கள் எல்லாம் ஒடும்படி செய்து விட்டான். தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட, அவர் சிங்க வடிவம் கொண்டு பல அரக்கர்களைக் கொன்று தீர்த்தார். இறுதியாக அந்த சிம்மம் ஹிரண்யகசிபு கோட்டைக்குள் நுழைந்தது. ஹிரண்ய கசிபுவின் பல மைந்தர்களுள் பிரகலாதன் என்று ஒருவன் இருந்தான். புத்திசாலியாகிய அவன், ஒரு சாதாரண சிங்கம் இவ்வளவு பெரிய அழிவினைச் செய்ய முடியாது, ஆகவே விஷ்ணுதான் இப்படி ஒரு சிங்க வடிவுடன் வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டான். தன் தந்தையிடம் சென்று சிங்கம் என்பது விஷ்ணுதான் என்றும், அதனிடம் போர் புரியப் போக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவன் எல்லாம் சிங்கத்திடம் போர் புரிய அனுப்பினார். அவர்கள் அனைவரும் மாண்டனர். கடைசியாகத் தானே சென்று தன்னிடமுள்ள அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்திப் பார்த்தான். அவனுடைய ஆயுதங்கள் அந்த சிங்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாகச் சிங்கம் தன்னுடைய