பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாயு புராணம் 177 நகங்களால் அவனுடைய இருதயத்தைப் பிளந்து கொன்றது. கடைசியில் விஷ்ணு பிரகலாதனுக்குப் பட்டம் சூட்டினான். அந்தகாசுரன் சிம்மாசனத்தில் இருக்கும் போது அங்கு வந்த பிரகலாதன் நீயோ குருடன், பெரிய தந்தையார் உன்னைத் தத்து எடுத்துக் கொண்டதே தவறு. குருடனாகிய நீ எப்படி ஆட்சி செய்ய முடியும். ஆகவே உன் ராஜ்ஜியத்தை என்னிடம் கொடுத்துவிடு என்று சொல்லியதோடு அல்லாமல் அந்தகனை விரட்டிவிட்டான். அந்தகன் காடு சென்று பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான். பிரம்மன் எதிர்ப்படவில்லை. அக்கினியை வளர்த்துத் தன் உடம்பில் உள்ள சதைகளை யெல்லாம் வெட்டி பலியிட்டான். கடைசியாக பிரம்மன் வெளிப்பட்டு, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். விலங்குகள், அரக்கர்கள், அசுரர்கள், மனிதர்கள், தேவர்கள் ஆகிய யாராலும் எனக்குச் சாவு வரக் கூடாது. விஷ்ணுகூட என்னைக் கொல்ல முடியாத வரம் வேண்டும் என்று கேட்டான். பிறந்தவர்கள் இறந்தே தீர வேண்டும். உனக்கு எப்படி சாவு வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து சொல் என்றார் பிரம்மா. அந்தகன், ‘என்னைவிட மூத்த பெண் ஒருத்தியிடம் நான் விருப்பம் கொள்வேனானால் அப்போது எனக்குச் சாவு வரலாம்’ என்று கேட்டுக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று பிரம்மன் வரம் தந்தார். தவத்தால் கண்பார்வை பெற்றுவிட்ட அந்தகன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். அனைவரையும் துன்புறுத்தினான். சிலகாலம் கழித்து மந்தார மலைக்குத் தனது மூன்று சேனாதிபதிகளுடன் சென்றான். அந்த மலை மிக அழகாக இருந்ததால் அங்கேயே தங்கிவிட விரும்பினான். அவனுடைய சேனாதிபதிகள் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து ս.ւկ.-12