பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பதினெண் புராணங்கள் சொல்லும் கருத்தையும், அதற்கு முன்புள்ள சில தகவல் களையும் இங்கு தருகிறேன். ஒருமுறை நாரதர் பிருந்தாவனம் செல்கிறார். அங்கே வயது முதிர்ந்த இரண்டு பெண்மணிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்த்தவுடன், இவர்களை முன்பு எங்கோ பார்த்திருக் கிறோம் என்ற எண்ணம் நாரதருக்கு வருகிறது. அவர்களிடம் சென்று, நீங்கள் யார்? உங்களை முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன் என்று கேட்கிறார் நாரதர். மிகவும் வயது முதிர்ந்து கிழடு தட்டிய அந்த இரு பெண்களுள் ஒருத்தி நாரதரைப் பார்த்து பின்வருமாறு பேசுகிறார் நீங்கள் சொல்வது சரிதான். என் பெயர் பக்தி. இவர் பெயர் வைராக்கியம். நாங்கள் இருவரும் திராவிடத்தில் (தமிழகத்தில்) பிறந்து வளர்ந்தோம். அங்கே அழகும் இளமையும் உள்ளவர்களாக இருந்தோம். நாளாவட்டத்தில் அங்கிருந்து கர்நாடகத் தில் புகுந்தோம். அங்கே எங்கள் இளமைக் கோலம் குறையத் தொடங்கியது. பிறகு மகாராஷ்டிரம் வந்தோம். அங்கே முதுமை தொடங்கியது. பிறகு கூர் நகரத்திற்கு வந்தோம். இங்கு இளமை முழுவதும் அழிந்து அழகு கெட்டு முதுமை தட்டிய நிலையில் உள்ளோம்.' பாகவதத்தில் இந்தப் பாடல் மூலம், பக்தி தோன்றி வளர்ந்ததும், மிடுக்குடன் இளமைப் பொலிவுடன் திகழ்ந்ததும் தமிழகத்தில்தான் என்பதை இப்புராணம் ஏற்றுக் கொள்வதைக் காணலாம். அதனால் ஆராய்ச்சி யாளர்கள் பாகவத புராணத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் அதிகத் தொடர்பு உண்டு என்று கருதுகின்றனர். பரம்பொருளின் வடிவாக இருந்த கிருஷ்ணனிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் கொண்டு வாழ்ந்த சிறப்பை மிகுதியாகக் கூறுவதே பாகவத புராணத்தின்