பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 187 தனி அழகாகும். வேதங்கள் பரப்பிரம்மத்தை வடிவற்ற, உருவற்ற எதனோடும் தொடர்புபடாத தனித்துவம் உடையது என்று கூறுகின்றன. அது அனைத்தும் அறியும் பேராற்றல் என்றே அவை பேசின. வாழும் உயிர்களுக்குப் பரப்பிரம்மம் தொடர்பில்லாத தனிப் பொருளாக இருந்த நிலைமை போகத் தொடர்புடைய பொருளாகக் காணத் தொடங்கியது. பேராற்றல் வடிவமான இப் பரப்பிரம்மத்திடம் இருந்துதான் அனைத்தும் உதயமாகின்றன. உயிர்கள் இயங்குவதற் குரிய ஆற்றலும் அதனிடமிருந்தே இயங்குகிறது. இயக்கமற்ற ஜடப் பொருளிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. இந்தப் புராணத்தில், இந்தப் பேராற்றல் வாசுதேவன் என்ற பெயருடன் பேசப்படுகிறது. இந்தப் பேராற்றல் எங்கும் நிறைந்ததாய், எல்லாம் அறிந்ததாய், என்றுமுள்ளதாய்க் காட்சி அளிக்கிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் தானே ஈஸ்வரன் என்றும், அண்டங்களைப் படைத்து, காத்து, அழிக்கும் தலைவன் என்றும் கூறுகிறார். தம்பால் அடைக்கலம் என்று முழு நம்பிக்கையுடன், பேரன்புடன் அணுகும் மனிதர்களின் குற்றங் குறைகளை மன்னித்து ஆட்கொள்பவன் அவனே ஆவான். பரப்பிரம்மம் நிர்க்குணமாய், வடிவற்றதாய் விளங்கி னாலும், ஈஸ்வரனாக இறங்கி வருகின்ற நிலையில் எல்லையற்ற ஆனந்த வடிவினனாய், அண்டத்தை இயக்கும் ஆற்றலின் இடையே தானே இயக்குகிறோம் என்ற நினைவுடன் தொழிற்படுகிறது. சாக்தர்கள் உண்மையான பாகவதம் இப்புராணம் அன்று, தேவி பாகவதமே உண்மையானது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் தேவி பகவதியின் தோற்றம், வரலாறு ஆகியவற்றைக் கூறும் காளிகா புராணமே உண்மை