பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பதினெண் புராணங்கள் யான பாகவதம் என்று கருதுகின்றனர். இந்த இரு கட்சிக்காரர்கள் கூற்றுக்களை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை. பாகவத புராணத்தில் தேவி பாகவதம் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆதி சங்கரர் பாடிய கோவிந்தா அஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது. பாகவத புராணம் 12 ஸ்காந்தங்களையும், 335 அத்தியாயங்களையும், 18,000 பாடல்களையும் உடையது. பாகவத புராணத்தின் 12 ஸ்காந்தங்களில் பத்தாவது ஸ்காந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு வளர்ப்பு அவனுடைய லீலைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பதினொன்றாவது ஸ்காந்தம் யாதவ குலத்தின் அழிவு, கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் ஆகியவற்றையும் பேசுகிறது. பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்தவை இருபத்தி ஒன்று எனவும், இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம் என்றும், மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது. பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்துதான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன. நாம் அறிந்த பத்து அவதாரங்களை இடை இடையே சேர்த்துக் கொண்டு 22 அவதாரங்களை பாகவத புராணம்