பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 189 விரிவாகப் பேசுகிறது. அவை வருமாறு: எல்லா வகையிலும் பண்பட்ட ஒரு பிராமணனாகத் தோன்றியது முதல் அவதாரம். இரண்டாவது பன்றியாக உருவெடுத்துக் கடலுக்கடியில் மறைந்து போன பூமியைத் தோண்டி எடுத்து வந்து உரிய இடத்தில் வைத்த வராக அவதாரம். மூன்றாவது நாரதராகத் தோன்றியதாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பக்தியின் அவசியத்தை உலகிற்கு விளக்கினார். நான்காவது, நர-நாராயண அவதாரம். இவர்கள் இருவரும் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டு உலகிற்கு வழிகாட்டினர். ஐந்தாவது கபில முனியாகத் தோன்றிய அவதாரம். கபில முனி மற்றொரு முனிவராகிய அசுரி என்ற முனிவருக்கு உபதேசம் செய்யும் வகையில் சாங்கிய தரிசனம் என்ற கொள்கையைப் பரப்பினார். (மூன்றாவது அவதாரம் பக்திப் பெருக்கையும், நான்காவது அவதாரம் புலன்களை அடக்கித் தவம் செய்வதையும், ஐந்தாவது அவதாரம் அறிவு வளர்ச்சி பெற்று அறிவின் துணை கொண்டு புதிய சிந்தனைகளை வளர்ப்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.) ஆறாவதாக உள்ளது தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார். ஏழாவது அவதாரம் யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான். எட்டாவது அவதாரம் ரிஷபர் என்ற பெயருடன் நபிக்கும், மருதேவிக்கும் பிள்ளையாகத் தோன்றியதாகும். மிகப் பெரிய ஞானிகட்கும், கல்விக் கடலைக் கரை கண்டவர்க்கும் தியானம்