பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxi பிரம்மாண்ட புராணத்தின் இக்கணக்கு, நம் அறிவையும் மனத்தையும் கதிகலங்கச் செய்யும் ஒர் எண்ணிக்கை யாகும். இவ்வாறு நம் முன்னோர் கூறியதன் அடிப்படையைச் சிந்திக்க வேண்டும். இந்த பூமி நித்தியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பதற்கே இந்தக் கணக்கைப் பயன் படுத்தினர். யுக முடிவில் மகாபிரளய காலத்தில் 5. பூதங்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி ஆகாயமாக நின்று விடுகின்றது. அதனையே, திருமாலின் வயிற்றுக்குள் அனைத்தும் சென்று அடங்கிவிடுகின்றன என்று நம் முன்னோர் கூறினர். மறுபடைப்புக் காலத்தில் ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டுப் பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறது. இவை ஒன்று ஒன்றாக மாறுதல் அடைவது தவிர, உள்ளது அழிவதுமில்லை, இல்லாதது தோன்றுவதுமில்லை. திரு. எஸ்.டி. குல்கர்னி அவர்கள் பொதுப் பதிப்பாசிரிய ராக இருந்து வெளியிட்டுள்ள The Puranas என்ற நூலின் 2வது பாகத்தில் வியாச முனிவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்து சிந்தித்தால் அவர் கூற்று பெரிதும் பொருத்தமுடையதாகவே காணப்படுகிறது. 5 வேதங்களை அனைவரும் படித்துப் புரிந்துகொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆகவே வேத ஆராய்ச்சி செய்து மக்களுக்குப் புரியும் வகையில் அதனை எடுத்துச் சொல்பவர்கள் வியாசர் என்று அழைக்கப் பட்டனர். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வேதவியாசர் இருந்ததாக வாயு புராணம் கூறுகிறது. முதலாவது வேத வியாசர் சுவயம்பு மனுவே ஆவார். இப்புராணத்தில் 28 வியாசர்கள் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதினெட்டு மகாபுராணங்களிலும் எல்லா தெய்வங்களும் ஒவ்வொரு புராணத்திலும் பேசப்