பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 பதினெண் புராணங்கள் இருபத்திஒன்றாவது புத்தரது அவதாரம் ஆகும். இவர் புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர். இருபத்திரண்டாவது, இனி வரப்போகின்ற கல்கி அவதாரம். விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகக் கலியுகத்தின் முடிவில் தோன்றப் போகின்றவர் கல்கி ஆவார். இருபத்திமூன்று, இருபத்தி நான்கு அவதாரங்களின் பெயர்களை பாகவத புராணம் குறிப்பிட வில்லை. வேதவியாசரின் அரும்பணி வேதவியாசருக்குச் சுகதேவர் என்ற ஒரு மகன் இருந்தான். கற்க வேண்டிய அனைத்தையும் கற்று மாபெரும் அறிவாளி யாகிவிட்ட அவர், அதிகம் பேசாத காரணத்தால் மற்றவர்கள் அவரின் அறிவின் ஆழத்தை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பலர் அவரைக் கல்வி ஞானம் இல்லாதவர் என்றும், ஒர் அசடு என்றுமே கருதினர். இந்நிலையில் வேதவியாசர் வேதங்களை நான்காகப் பிரித்துப் பைலா என்பவருக்கு ரிக்வேதத்தையும், வைசம்பா யனருக்கு யஜுர் வேதத்தையும், ஜைமினிக்குச் சாம வேதத் தையும், சுமந்தாவிற்கு அதர்வண வேதத்தையும் கற்பித்தார். புராணங்கள் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுவதால், அவற்றை மற்றொரு சீடராகிய லோமஹர்ஷனருக்குக் கற்பித்தார். லோமஹர்ஷனரின் மகனாகிய சுதா என்பவர் மற்றைய முனிவர்களுக்கு பாகவத புராணத்தைச் சொன்னார். நான்கு வேதங்களையும் தொகுக்கும் பணி, மகாபாரதத்தை எழுதும் பணி ஆகிய மிகப் பெரிய சாதனை களைப் படைத்த வேதவியாசர் தாம் இன்னும் ஏதோ செய்ய வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, ஒருநாள் சரஸ்வதி நதியில் நீராடிவிட்டுத் தம் பர்ணசாலையில் அமர்ந்திருந்தார். இவ்வளவு செய்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு குறை