பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பதினெண் புராணங்கள் மகனாகிய அசுவத்தாமன் துரியோதனன் பக்கம் நின்று சண்டை செய்தவன். இப்போது துரியோதனன் உயிர் போகுமுன் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்க நினைத்தான். எனவே நட்ட நடுநிசியில் பாண்டவர்கள் பாசறைக்குள் ரகசியமாக நுழைந்து இளம் பஞ்ச பாண்டவர்கள் ஐவருடைய கழுத்தையும் வெட்டி அவர் தலைகளைக் கொண்டு வந்து துரியோதனிடம் காட்டினான். திரெளபதியின் ஐந்து பிள்ளைகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதால் ஒரே கூப்பாடு போட்ட அவள், உடனே பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று அருச்சுனனை நாடினாள். அருச்சுனன் அசுவத்தாமனைத் தேடிப்பிடித்து 'ஒருவருக்கொருவர் தனித்துப் போரிடலாம் என்று அறைகூவி அழைத்தான். யுத்தம் தொடங்கியது. அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். அதனால் தனக்கு அழிவு வராமல் இருக்க அருச்சுனனும் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தினான். இரண்டு அஸ்திரங்களும் தங்கள் எதிரியைத் தாக்க முடியாமை யால் பூலோகத்தை அழித்துவிடும் சூழ்நிலை உருவாகியது. முனிவர்கள் பலர் வந்து இவ்விருவரையும் பார்த்து உலகம் அழிவதற்கு நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது. தயவு செய்து உங்கள் அஸ்திரங்களைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டினார்கள். அருச்சுனன் தனது பிரம்மாஸ்திரத் தைத் திருப்பி அழைத்துக் கொண்டான். ஆனால் அசுவத்தாம னுக்கு அப்படையை விடத் தெரியுமே தவிர திருப்பி அழைக்கத் தெரியாது. அதனால் அருச்சுனனைக் கொல்ல முடியாத அப்படை அவன் சந்ததியைத் தாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அருச்சுனனின் மருமகளாகிய உத்ராவின் கருவுக்குள் நுழைந்தது. அக்கருவில் அருச்சுனன் மகனாகிய அபிமன்யுவின் குழந்தைக் கரு வளர்ந்து கொண்டிருந்தது. இதை அறிந்த உத்ரா, இந்த ஆபத்தைத் தடுப்பதற்காகக்