பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 195 கிருஷ்ணனிடம் ஒடினாள். வேறு வழியில்லாமல் கிருஷ்ணன் தானே அக்கருவினுள் நுழைந்தான். நுழைந்த கிருஷ்ணன் அக்கருவைக் காப்பாற்றியும் விட்டான். இது ஒருபுறம் நடக்கையில் அருச்சுனன் அசுவத்தாமனைக் கட்டி இழுத்து வந்து திரெளபதி முன் நிறுத்தினான். அருச்சுனன் இவனை இப்போது கொல்வது எளிது. ஆனால் நம் ஆச்சாரியரின் மகனைக் கொல்வது பாவம். இவன் சிறப்புக்கெல்லாம் காரணமாக இவன் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் வைரத்தை எடுத்துக் கொண்டு இவனை அனுப்பி விடலாம்' என்று கூறினான். திரெளபதி இதை ஏற்றுக் கொண்டதால் முடிமணி பறிக்கப்பட்டு அவன் விரட்டப்பட்டான். உரிய காலத்தில் உத்ராவிற்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு 'விஷ்ணுரதன் என்று பெயரிட்டனர். விஷ்ணுரதன் இளமைப் பருவத்திலிருந்தே யாரைப் பார்த்தாலும், தான் கருவில் இருக்கும் பொழுது கண்ட பரம புருஷன் இவன்தானோ என்று சந்தேகப்பட்டு, காணுகின்ற ஒவ்வொருவரையும் பரிட்சித்துப் பார்த்ததால் பரிட்சித்து’ என்ற காரணப் பெயர் பெற்றான். கிருஷ்ணனின் துவாரகை வரவும், அவன் முடிவும் குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பாண்டவர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்ட்ரன், அஸ்தினாபுரத்தில் முடிசூட்டிக் கொண்டான். சில காலம் அவர்களுடன் இருந்து விட்டுக் கிருஷ்ணன் துவாரகைக்குச் செல்ல முற்பட்டான். கிருஷ்ணன் யாதவ நாட்டிற்கு வருகிறான் என்ற செய்தி அறிந்த யாதவர்கள் பெரும் குதுகலமடைந்தனர். துவாரகை முழுவதும் விழாக் கோலம் பூண்டு அலங்கரிக்கப்பட்டது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் கூடக் கிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைவதைப் போலப் பூத்துக் குலுங்கின.