பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 197 முதலிய நான்கு பிள்ளைகள் இருந்தனர். தனது பராக்கிரமத் தால் பரிட்சித்து இரண்டு அசுவமேத யாகங்களை நடத்தினான். குரு வம்சத்தின் குருவாக இருந்த கிருபாச்சாரியாரே யாகத்தை முன்னின்று நடத்தினார். திடீரென்று ஒரு நாள் கலிபுருஷன் இவனுடைய நாட்டிற்குள் புகுந்து விட்டதாகக் கேள்விப் பட்டான். போர் புரிவதற்குரிய தளவாடங்களுடன் சென்று, கலியுடன் சண்டை செய்தான். கலி வெவ்வேறு வடிவமெடுத்து ஒட, இறுதியாகப் பரிட்சித்து ஒர் அபூர்வக் காட்சியைக் கண்டான். ஒரு பசுவும், ஒரு எருதும் தம்முள் பேசிக் கொண்டிருந்தன. உலகம் ரொம்பவும் கெட்டுப் போய்விட்டது என்றும், தீமைகள் மிகவும் மலியத் துவங்கி விட்டது என்றும் பேசிக் கொண்டிருந்தன. இப் பசுவும், எருதும் வேறு யாரு மில்லை. பிருத்வி பசுவாகவும், தர்ம தேவதை எருதாகவும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு சூத்திரன் இந்தப் பசுவையும், எருதையும் நையப் புடைத்துக் கொண்டிருந்தான். ஒடிச் சென்ற பரிட்சித்து, "அடேய்! நீ யாரென்று நினைக்கிறாய்? நீ செய்யும் அடாத காரியத்தின் விளைவை நீ அறிவாயா? இந்தப் பசுவையும் எருதையும் கொடுமைப்படுத்திய நீ சாகவேண்டியவன்” என்று கூறி, தன்னுடைய வாளை உருவினான். உடனே அந்தச் சூத்திரன் பரிட்சித்து கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கலிபுருஷன் என்ற தன் சுயரூபத்துடன் நின்றான். “அரசே! என்னைக் கொன்றுவிடாதே. உன்னுடைய பரந்த ராஜ்ஜியத்தில் ஒரு சில இடங்களை எனக்கு ஒதுக்கிக் கொடு. நான் அந்த இடத்தை விட்டு வெளிவராமல் இருந்து கொள்கிறேன்” என்று கூறினான். மனமிரங்கிய பரிட்சித்து, "தீயவர்கள் வாழும் இடம், கொலை புரிவோர் வாழும் இடம், சூதாடும் இடம், குடிகாரர்கள் வாழும் இடம் ஆகிய இந்த இடங்களை நீ