பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 பதினெண் புராணங்கள் தங்குவதற்குரிய இடமாக வைத்துக் கொள். என் ஆட்சியில் இந்த இடங்களைத் தவிர நீ எங்கும் தலைகாட்டக் கூடாது" என்று ஆணையிட்டான். இதன் பிறகு ஒருமுறை வேட்டைக்குச் சென்ற பரிட்சித்து மன்னன், ஒரு மானைத் துரத்திக் கொண்டு மிக நீண்ட தூரம் சென்று விட்டான். பசியும், தாகமும் அவனை வாட்டின. சுற்றுமுற்றும் பார்க்கையில் ஒரு குடிசை தென்பட்டது. அங்கே தண்ணிர் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அக் குடிசைக்குள் நுழைந்தான். குடிசைக்குள் மான்தோலைப் போர்த்துக் கொண்டு, சடை ஏறிப் போன தலையுடன் ஷாமிகா என்ற முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். மன்னன் அதிகாரத் தொனியில் “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’ என்று கேட்டான். பதில் ஒன்றும் வராததால், தன்னை அவமதித்ததாக நினைத்த அரசன் மறுபடியும் உரத்த குரலில் கேட்டான். முனிவனின் தவம் கலையவில்லை. சினம் மிகுந்த பரிட்சித்து கவட்டைக் குச்சியால் பக்கத்தில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டு விட்டுப் போய்விட்டான். அவன் போன சில நேரத்திற்குப் பின் முனிவரின் மகன் குடிசையில் நுழைந்த பொழுது " இக்கோரக் காட்சியைக் கண்டான். மகா சக்தி வாய்ந்தவனும், தவ வலிமை உடையவனுமாகிய அவன், “என் தந்தையை இவ்வாறு செய்தவன் இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சன் என்ற பாம்பால் இறப்பை எய்துவான்’ என்று சாபமிட்டான். கண்விழித்த முனிவர், "மகனே! என்ன காரியம் செய்து விட்டாய்? மிக்க பராக்கிரமசாலியும், நம்மை எல்லாம் காக்கின்ற மன்னனுமாகிய பரிட்சித்துக்கு இவ்வாறு சாபம் கொடுத்து விட்டாயே, அவன் செய்த மிகச் சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனை பொருத்தமில்லாததாகும்." என்று கூறி வருந்தினார்.