பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 பதினெண் புராணங்கள் களுக்கு "பாகவத புராணம்” உதவுகிறது. அந்தப் புராணத்தை இயற்றிய என் தந்தையாகிய வேதவியாசர் அதை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை உனக்கு இப்போது சொல்லப் போகிறேன்” என்று கூறிவிட்டு மேலே தொடங்கினார்: சாவு வந்து கதவைத் தட்டும் பொழுது, இவ்வுலகப் பொருள்களையும், வாழ்க்கையையும் மறந்துவிட்டு ஒருவன் ஏதாவது ஒரு புண்ணிய கேடித்திரம் சென்று தியானத்தில் அமர வேண்டும். தியானம் என்பது ஓம்காரத்தை தியானிப்ப தாகும். மூச்சை அடக்கி, பிராணாயாம முறையில் இழுத்து விடுவதால் பொறி புலன்கள் ஒருமுகப்படும். அந்த நிலை யில் ஓங்காரத்தைத் திருப்பித் திருப்பி உச்சரிப்பதால் மனம் ஒருநிலைப்படும். யோகம் என்பது மனித ஆத்மாவை தெய்வீக ஆற்றலுடன் இணைவிப்பதே ஆகும். யோகிகள் என்பவர் இந்த ஆத்ம- தெய்வ ஒருங்கிணைப்பை நிலைநிறுத்த முயல்ப வர்கள் ஆவர். யோகி என்பவன் பொருத்தமான பத்மாசனம் போன்ற ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மூச்சுக் காற்றை சமனப்படுத்தும் பிராணா யாமத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது விஷ்ணுவின் விஸ்வரூபத்தில் மனத்தைப் பதிய வைக்கிறது. விஷ்ணுவின் விஸ்வரூபம் எங்கும் நிறைந்துள்ளது. இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் அதுவே வியாபித்துள்ளது. ஐம்பூதங்களிலும், விஷ்ணுவின் வியாபகமே நிறைந்துள்ளது. இந்தப் பூரண வடிவுக்குள், யோகத்தின் பயனாக உள்ள சித்துப் பொருள் அமைந்துள்ளது. இந்தப் பரம்பொருளின் பாதமாக அமைந்துள்ளது பாதாள லோகம். பூமி அப்பொருளின் தொடைப் பகுதியிலும், ஆகாயம் என்பது அப்பொருளின் கொப்பூழ்ப் பகுதியிலும் உள்ளது. இந்த மாபெரும் வடிவத்தை "விஸ்வரூபம்’ என்று கூறுவர். அப்பொருளின் இருதய ஸ்தானத்தில் அமைந்திருப்பது