பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xxii படுகின்றனர். புராணத்தின் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு சிவ சம்பந்தமுடையது, விஷ்ணு சம்பந்தமுடையது என்று கூறுவதற்கில்லை. பதினெட்டுப் புராணங்களும் பின்வரும் முறையில் பிரிக்கப்பட்டுள்ளன. பிரமன் சம்பந்தமானவை பிரம புராணம், பத்ம புராணம், சூரிய சம்பந்தமானது பிரம்ம வைவர்த்த புராணம்; அக்னி சம்பந்தமுடையது அக்னி புராணம், சிவ சம்பந்தமானவை வாயு புராணம், ஸ்கந்த புராணம், இலிங்க புராணம், கூர்ம புராணம், வாமன புராணம், வராக புராணம், பவிஷ்ய புராணம், மச்ச புராணம், மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகிய பத்து புராணங்கள்; விஷ்ணு சம்பந்தமானவை நாரத புராணம், பாகவத புராணம், கருட புராணம், விஷ்ணு புராணம் ஆகிய நான்கும் ஆகும். இப்புராணப் பெயர்களையும் அதில் சேர்க்கப்பட்டுள்ள தலைப்பையும் பார்க்கும்பொழுது சிலருக்கு வியப்புத் தோன்றலாம். சிவ சம்பந்தமானவை என்ற தலைப்பில் வராக புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம் என்ற மூன்று பெயர்கள் வருவதை கவனிக்க வேண்டும். இவை மூன்றும் விஷ்ணு சம்பந்தமானவை என்பதில் ஐயமிருப்பதற் கில்லை. என்ன காரணத்தாலோ கூர்ம புராணம், வராக புராணங்களில் சிவனைப் பற்றி இடைச் செறுகல்கள் மிகுதியாக ஏற்றப்பட்டுள்ளன. ஒரு காலத்தில், அதாவது கி.பி. 6, 7ஆம் நூற்றாண்டுகளில் சைவ, வைணவப் போராட்டம் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். அம்மாதிரி காலங்களில் வராகம், கூர்மம் முதலானவற்றில் சிவ சம்பந்தமுடைய கதைகளை இடைச் செறுகல்களாகப் புகுத்தினர் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் இம்மூவருள் யார் பெரியவர் என்ற சண்டையைப் பெரிதாக்கிப் பகைமையை வளர்க்காமல்