பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 201 நட்சத்திரங்கள் சூழ்ந்துள்ள சொர்க்க லோகமாகும். இதற்கு மேற்குப் பகுதியில், பிரபஞ்சத்தின் உயர்வான பகுதிகள் அமைந்துள்ளன. பிரபஞ்சம் முழுவதும் 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏழு பகுதிகள் பாதாள லோகங்கள் என்று கூறப்படும். அவையாவன: அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ராசதல, பாதாள லோகங்கள் எனப்படும். மேற்பகுதியில் உள்ள 7 உலகங்கள் ஆவன: பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகரலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம் ஆகியவை. இந்தப் பரம்பொருளின் தொண்டைப் பகுதியில் உள்ளது மகரலோகம். வாய்ப் பகுதியில் உள்ளது. ஜனலோகம், நெற்றிப் பகுதியில் உள்ளது தபலோகம், தலைப் பகுதியில் உள்ளது சத்யலோகம். இந்திரன் முதலிய தேவர்கள் அப்பொருளின் கைகளாவர். நான்கு திசைகளும் அப்பொருளின் காதுகளாகும். இரண்டு அஸ்வினிகளும் அப்பொருளின் மூக்காகவும், சுடர்விடும் அக்கினியாக வாயுவும், சூரியன் அப்பொருளின் கண் ணாகவும், பகல் இரவு கண்ணின் இமைகளாகவும் உள்ளன. பரம்பொருளின் புன்சிரிப்பே மாயை எனப்படும். மலைகள் எலும்புகளாகவும், ஆறுகள் அவனுடைய நரம்புகளாகவும், மரங்கள் அவன் உடல் ரோமங்களாகவும், காற்று அவன் மூச்சாகவும், மேகங்கள் அவன் முடியாகவும் உள்ளன. ஒருவன் யோகப் பயிற்சியில் ஒருமுகப்பட்டு தியானிக்க வேண்டியது இந்த விஸ்வரூபமேயாகும். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பரிட்சித்து மன்னன், தன் மனைவி, மக்கள், அரசு ஆகியவற்றை மறந்து விஷ்ணுவின் தியானத்தில் ஈடுபடலானான். என்றாலும் இப்பரம்பொருள் கிருஷ்ணனாக அவதரித்துச் செய்தவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தவனாய், சுகமுனிவரைக் கேட்க அவர் சொல்லத் தொடங்கினார். .