பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பதினெண் புராணங்கள் படைப்பும், படைத்தவனும் அனாதி காலத்தில் இருந்தது ஒரு மாபெரும் முட்டை யாகும். எங்கும் நீரே நிறைந்திருக்க இந்த முட்டை அதில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முட்டையிலிருந்து தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு விஷ்ணு தோன்றினார். ஆயிரக்கணக்கான முகங்கள், கால்கள், கைகள் என்பவற்றுடன் அவர் இருந்தார். பிரம்மாவைத் தன்னுடைய கொப்பூழி லிருந்து தோன்றிய தாமரையினின்று விஷ்ணுவே தோற்று வித்தார். தோற்றுவிக்கப்பட்ட பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப்புவித்தார். சிவனை உண்டாக்கி அழித்தல் தொழிலை ஒப்புவித்தார். பிரம்மனும், சிவனும் விஷ்ணுவின் கட்டளைக்குட்பட்டே பணி புரிந்தனர். விஷ்ணு சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களையும் படைத்தார். அறிவும், அறிவு சார்ந்த பணிகளும் சத்துவ குணத்தின் ஆட்சிக்கு உட்பட்டன. செயல், செயல்முறை ராஜச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை. பொறி புலன்கள், ஐம்பூதங்கள் ஆகியவை தாமச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை. உத்தவரும், விதுரரும் மகாபாரதக் கதையில் விதுரனின் பங்கு மிக அதிகமாகும். திருதராஷ்டிரன் மகன் துரியோதனன் பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகை முதலிய பல வழிகளைக் கையாண்டு முடியாததால் பொய் சூது ஆடவைத்து அவர்கள் ராஜ்ஜியத்தை இழக்குமாறு செய்தான். இந்த நிலையில் அவர்களுக்கு உரிய ராஜ்ஜியத்தைத் திருப்பித் தருவதுதான் நியாயமானது என்று அறிந்த விதுரன் மன்னன் திருதராஷ் டிரனுக்குப் பல அறிவுரைகள் எடுத்துச் சொன்னான். ஆனால் துரியோதனன் மேல் கொண்ட அளவற்ற பாசத்தால் திருதராஷ்டிரன் இதைச் செய்ய முன்வரவில்லை. மன்னனை