பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பதினெண் புராணங்கள் வேண்டிய விஷயம். விஷ்ணுவை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் பிரம்மனுடைய மூக்கில் இருந்து மிக மென்மையான பன்றி வெளிப்பட்டது. பிரம்மனும், ஏனைய முனிவர்களும் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் பன்றி வளர்ந்து ஒரு பெரிய யானையை விடப் பெரிதாக வடிவெடுத்தது. சற்று நேரத்தில் பன்றியின் கொம்புகள் ஜொலிக்க, அதன் கண்களிலிருந்து ஒளிவீச, அதன் பிடரி யிலிருந்து மயிர்கள் மேக மண்டலத்தை வருடத் தொடங்கின. திடீரென்று அப்பன்றி மிகப் பெரிய குரலெடுத்து உறுமத் தொடங்கியது. அந்த ஒலி எட்டுத் திசைகளையும் அதிரச் செய்தது. கிறிது நேரத்தில் அந்த வராகம் கடலில் குதித்தது. கடலே இரண்டாகப் பிளக்குமாறு வராகம் குதிக்கவும் கடல் அலைகள் மிக உயரத்திற்குக் கிளம்பின. கடலுக்குள் குதித்த வராகம் நேரே கீழ் லோகத்திற்குச் சென்று அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் கொம்புகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு மேலே புறப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த தைத்திரியர்களின் தலைவனான இரண்யாக்ஷன் என்பவன் வராகத்தை எதிர்க்க அவ்வடிவில் இருந்த விஷ்ணு சக்கரத்தைப் பயன்படுத்தி இரண்யாக்ஷனைக் கொன்று, பூமியை மீட்டு வந்து கடலில் மிதக்க விட்டார். இரண்யாக்ஷன் யார் என்று விதுரர் கேட்க, மைத்ரேயி சொல்லத் துவங்கினார்: ஒரு காலத்தில் காசிய முனிவனின் மனைவி திதியின் வயிற்றில் இரண்டு அசுரர்கள் கருவில் உதயமாயினர். நூறு ஆண்டுகள் கருவை விட்டு வெளி வராமல் திதியின் வயிற்றில் இருந்தனர். மிகக் கொடியவர்களாகிய அவர்கள் கருவில் இருக்கும் போதே பூமியில் பல பிரச்சினை களை உண்டாக்கினர். சூரியனும், சந்திரனும் கூட ஒளியிழந்து