பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பதினெண் புராணங்கள் பிறந்தனர். அவர்கள் முறையே கலா, அனுசுயா, சரத்தா, கதி, கியாதி, அருந்ததி, ஹவிர்பு, கிரியா, சாந்தி ஆகியோர். இவர்கள் மார்ச்சி, அத்ரி, அங்கீரா, புலஸ்தியா, புலஹா, கிரது, பிருகு, வசிஷ்டன், அதர்வன் ஆகியோரை மணந்தனர். அடுத்து விஷ்ணு பிறக்கப் போகிறார் என்பதால் கர்தம முனிவர் ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துப் பல ஆசைகளோடு வசதியாக வாழக்கூடிய விமானத்தைப் படைத்தார். அந்த விமானத்திலேயே முனிவரும், அவர் மனைவியும் தங்கினார்கள். ஒன்பது பெண்களும் பிறந்து அவர்கள் திருமணம் முடிந்த பிறகு கபிலா என்ற பெயருடன் விஷ்ணு அவதரித்தார். சிலகாலம் கழித்து முனிவர் தீர்த்த யாத்திரை சென்று விட்டார். உலக வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்த முனிவரின் மனைவி மகன் கபிலாவைப் பார்த்து “உலகப் பற்று என்னை விட்டு நீங்கிவிட்டது. உண்மையான ஞானம் எது என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றாள். தாய்க்கு விளக்கம் கூறும் முறையில் கபிலா ஒரு புதிய சித்தாந்தத்தை எடுத்துக் கூறினார். அதுவே சாங்கிய யோக தத்துவம்' என்று சொல்லப்படும். யோகம் என்பது ஒன்றுடன் ஒன்று பிணைவது என்ற பொருளைத் தரும். ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் இணைப்பதே யோகம் எனப்படும். யோகம் என்பது மகிழ்ச்சி, துக்கம் இரண்டையுமே வெற்றி கொள்வது. மனம் என்பது பொருள்களில் ஈடுபட்டு அவற்றோடு ஒட்டிக் கொள்கிறது. இவற்றிலிருந்து மனத்தைப் பிரிப்பது மிகக் கடினமான காரியம். யோகத்தை வளர விடாமல் தடுப்பது இப்பற்றேயாகும். இந்தப் புறப்பற்றுக்களில் இருந்து விடுபடுவதுதான் முக்கியமாகும். இதற்கடுத்தபடியாக அகங்காரம் என்னும் அகப்பற்றை வெல்ல வேண்டும். ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு இணைக்கச் செய்யும் ஒரு வழியே பக்தி எனப்படும் பரப்பிரம்மம் என்பது வடிவு, குணம்,