பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 207 உருவம் எதுவும் இல்லாதது ஆதலின் அதை வருணிக்க முடியாது. பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் வேற்றுமை இல்லை என்பதை உணராதவர்கள் பிறந்து பிறந்து உழல வேண்டும். கபிலா உபதேசித்த சாங்கிய தத்துவத்தை அறிந்த அவர் தாய்க்குப் பல பற்றுகளும் நீங்கின. இந்த உடம்பு முதலியவை மாயை என்று நன்கு புரிந்தது. சரஸ்வதி நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு தவம் செய்து வந்தார். கபிலாவின் தாய் தவம் செய்த இடமே இன்று சித்திபாதா என்ற பெயருடன் விளங்குகிறது. மனுவிற்கு 3 பெண்கள் பிறந்தார்கள் என்றும், அவருள் தேவஹ்தி, கார்தம முனிவரை மணந்தார் என்பதையும் விதுரா நீ அறிவாய். மற்ற இரண்டு பெண்களுள் அகுதி என்பவள் ருச்சி என்ற முனிவரை மணந்து ஒரு பெண்ணையும், ஆணையும் பெற்றாள். அந்த ஆண் பிள்ளை, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இந்தப் பிள்ளையைத் தாத்தாவாகிய சுவயம்பு மனுவே வளர்த்தார். அகுதியின் மகளாகிய தட்சணாவை விஷ்ணுவே மணந்து, துஷிதாஸ்’ எனப்படும் 12 பிள்ளைகளைப் பெற்றார். பிரம்மனின் மகனாகிய தட்சன் மூன்றாவது பெண்ணாகிய பிரசுதியை மணந்தான். இவர்களுக்கு 16 பெண்கள் பிறந்தனர். இவர்களில் 13 பேரை தர்மராஜன் மணந்தார். ஒருத்தியை அக்னிதேவன் மணந்தான். பிதுர்களை ஒருத்தி மணந்தாள். கடைசிப் பெண் சிவனை மணந்து கொண்டாள். தர்மராஜனின் மனைவியருள் ஒருத்தியாகிய மூர்தி இரண்டு முனிவர்களைப் பெற்றாள். அவர்கள் நர, நாராயணன் எனப்படுவர். இவர்கள் இருவரும் விஷ்ணுவின் அவதாரம் எனப்படுவர். அனைவராலும் போற்றப்பட்ட இவர்கள் கந்தமாதன மலையில்