பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பதினெண் புராணங்கள் தவம் இயற்றினர். தட்சனின் மகளுள் ஒருத்தியான சதி சிவனை மணந்தாள். தட்சன், சிவனை அவமானப்படுத்தியதால் உயிரை நீத்தாள். தட்சன் யாகம் முன்னொரு காலத்தில் பிரம்மனுடைய மகனாகிய தட்சன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அனைத்து முனிவர்களும், பிரம்மன், சிவன் ஆகிய அனைவரும் அங்கே கூடி இருந்தனர். திடீரென்று தட்சன் அங்கே வரவும் எல்லோரும் எழுந்து அவனுக்கு மரியாதை செய்தனர். அவ்வாறு மரியாதை செய்யாதவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பிரம்மன், சிவன் ஆகிய இருவர் மட்டுமே. பிரம்மன் எழுந்திருக்காததில் தட்சனுக்கு வருத்தமில்லை. தந்தை எழவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் சிவன் எழுந்திருக்காதது அவனுக்கு மன உளைச்சலைத் தந்தது. கூடி இருந்தவர்களைப் பார்த்து, இந்தச் சிவனுக்கு மருமகன் என்ற முறையில் எழுந்து மரியாதை செய்யக் கூடத் தெரியவில்லை. அறிவற்றவன் என்று கூடக் கூறலாம். பயித்தியம் பிடித்தவ னாகிய இவன் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டு பிணங்களைச் சுட்ட சாம்பலைப் பூசிக் கொள்கிறான். இவனுக்குப் பெண் கொடுத்ததே பெரிய தவறு என்று நினைக்கிறேன். என்னை அவமானப்படுத்தியதால் இன்று முதல் யார் யாகம் செய்தாலும் சிவனுக்கு அவிர் கொடுக்கக் கூடாது என்று சாபமிடுகிறேன் என்று கூறினான். சிவன் அவன் வார்த்தைகளைச் சட்டை செய்யவே இல்லை. ஆனால் சிவனுடன் வந்த நந்தி கூடியிருந்தவர்களைப் பார்த்து, 'சிவனை இப்படி அவமானம் செய்யும் பொழுது தட்சனுக்குப் புத்தி சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே இங்கிருக்கும் முனிவர் யாவரும் பூவுலகில் பிறந்து, இறந்து,