பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகவத புராணம் - 209 பிறந்து உழல்வீர்களாக!' என்று சாபமிட்டான். இந்தச் சாபத்தைப் பொறாத முனிவர்களுள் ஒருவனாகிய பிருகு எதிர் சாபமிட்டான். இந்த சிவனைப் பின்பற்றுகின்றவர் அனைவரும் சடைப் பிடித்த தலையுடன், உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, குடித்துக் கொண்டு திரிவார் களாக இத்தனைக் கூச்சல் குழப்பங்களுக்கும் இடையே வாய் திறக்காத சிவன் நந்தி முதலான கணங்களையும், தன்னைச் சேர்ந்தோரையும் அழைத்துக் கொண்டு யாகத்தினின்று புறப்பட்டுப் போய்விட்டார். சிவனில்லாமலே யாகம் 1,000 ஆண்டுகள் நடைபெற்றது. சிவனில்லாமல் தன் முதல் யாகத்தைச் செய்த செருக்கில் தட்சன் மறுமுறை வாஜபேயம் என்ற யாகத்தை வெற்றியுடன் செய்து முடித்தான். இந்த இரு யாகங்களும் சிவனில்லாமல் நடந்து வெற்றி பெற்றதால் மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' என்றொரு யாகத்தைத் தொடங்கினான். சிவனைத் தவிர அனைவருக்கும் அழைப்புச் சென்றது. கந்தர்வர்கள் தங்கள் விமானங்களில் யாகத்திற்காக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தனர். யாகத்தையும், தட்சனையும் அவர்கள் புகழ்ந்து பேசியவுடன் சதிக்கு ஒர் ஆசை பிறந்தது. சிவனிடம் சென்று தந்தை செய்யும் பெரிய யாகத்திற்கு நாமும் போக வேண்டும் என்றாள். தங்களை யாரும் அழைக்கவில்லை என்று சிவன் கூறியதற்கு, 'மாமனார் செய்யும் யாகத்திற்கு மருமகனுக்கு அழைப்புத் தேவையா? நாம் போவதில் தவறில்லை. மேலும் என் சகோதரிகளைப் பார்த்துப் பலகாலம் ஆகிவிட்டது. என் தாயைப் பார்த்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. எனவே போயே தீர வேண்டும்” என்று அடம் பிடித்தாள். சிவன், தான் வர மறுத்துத் தக்க துணையுடன் சதியை அனுப்பினார். ւ.ւ.-14 -