பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii மூவரும் ஒருவரே என்ற கருத்தையே எல்லாப் புராணங் களும் வலியுறுத்துகின்றன. இப்புராணங்களின் காலத்தை நிர்ணயிப்பது கடினமான காரியமாகும். காரணம் எந்த ஒரு புராணமும் தோன்றிய நிலையில் இன்றில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லா நூல்களையும் போலப் புராணங்களிலும் மூலத்தைவிட இடைச் செறுகல் பகுதி மிகுத்துக் காணப்படுகின்றன. திரு. எஸ்.டி. குல்கர்னி பதிப்பித்த 'The Puranas என்ற நூலில் இன்றைய ஆராய்ச்சியாளர் பலரும் ஏற்காத முறையில் ஆதிசங்கரர் காலத்தை கி.மு. 509 என்றும், சங்கரரின் ஆசிரியருக்கு ஆசிரியரான கெளடபாதரின் காலத்தை கி.மு. 600 என்றும் கொள்கிறார். புத்தருடைய சாங்கிய மத நியாயவாதங்களை வாதிட்டு வெல்ல முயன்ற சங்கரர் காலத்தை கி.மு. 509 என்று கூறுவது பொருத்தமா என்று சிந்திக்க வேண்டும். இவ்வாறு சங்கரரை கி.மு.விற்குக் கொண்டு போவதால் புராணங்களை முன்னே கொண்டு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. ஆதிசங்கரர் தம்முடைய பாஷ்யத்தில் விஷ்ணு புராணத்திலிருந்து பல பாடல்களை மேற்கோள் காட்டுவதால் விஷ்ணு புராணம் கி.மு. 500க்கு முற்பட்டது என்று திரு. குல்கர்னி கூறுகிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலோரால் ஏற்றுக் கொண்டுள்ளபடி வேதகாலம் என்பதே கி.மு. 1500 முதல் 1000 வரை உள்ளதாகும். திரு. குல்கர்னி அவர்கள் வேதம் நான்காகப் பிரிக்கப்பட்ட காலத்தை கி.மு. 3200 என்று கொள்கிறார். வேதத்தை வகுத்தவர் வியாசர் ஆதலாலும், அந்த வியாசரே புராணங்களின் ஆசிரியர் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதாலும், புராணங் களின் காலம் கி.மு. 3100 என்ற முடிவிற்கு வருகிறார் குல்கர்னி. எல்லாவற்றிற்கும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட பழைமையைக் காட்டுவதால் அதற்கொரு சிறப்பு