பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 213 அவனைக் கொன்றவன் ஒரே ஒரு யட்சன். அப்படி இருக்க ஒரு பாவமும் அறியாத அப்பாவி யட்சர்களைக் கொன்று குவிப்பது நியாயமற்றது என்று கூறினர். துருவன் அதை ஏற்றுக் கொண்டு நாடு திரும்பி இரு மனைவியரை மணந்து முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து, உலக இன்பத்தில் வெறுப்புற்று வத்ரிக சர்மா என்னும் ஆசிரமத்தில் தவத்தில் இருக்கும்பொழுது விஷ்ணு லோகத்தினின்று வந்த விமானம் அவனை அழைத்துச் சென்றது. விஷ்ணுவின் ஆணையால் சப்தரிஷி மண்டலத்தின் கீழே துருவனுக்கு என்று ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது துருவன் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். இதை அடுத்து பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ள வென7 - பிருத்துவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் தரப்பட்டுள்ளது.) பிரசேதர்களும் புரஞ்சனனும் பிருத்துவின் பரம்பரையில் தோன்றியவன் பிராசீனவர்கி என்ற அரசன். அவனுக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்கள் பிரசேதாஸ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் காட்டு வழியே தவத்தை மேற்கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய ஏரியைக் கண்டனர். தாமரை பூத்துக் குலுங்கும் தடாகத்தில் சிவன் தன் கணங்களுடன் குளித்துக் கொண் டிருந்தார். சிவனை வணங்கிய பிரசேதர்களுக்கு அவர் சில அறிவுரைகளைத் தந்தார். அதை ஏற்றுக் கொண்ட அவர்கள் நீருக்கடியில் தவம் செய்யச் சென்றனர். + பிராசீனவர்கி, ஆட்சியில் இருக்கும் பொழுது நாரதர் ஒருமுறை அவனிடம் வந்தார். நாரதரைப் பார்த்து மன்னர், ‘ஐயனே! உலக இச்சையில் என் மனம் அழுந்திக் கிடக்கிறது.