பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 217 அவர்களுள் மூத்தவன் பரதன் எனப்பட்டான். அவன் பெயரை வைத்துத்தான் இப்பகுதிக்கு 'பாரத நாடு என்ற பெயர் வந்தது. ஜட பரதனின் கதை (விஷ்ணு புராணத்தில் வந்துள்ள பகுதி போக, புதிதாக வந்துள்ளவற்றை இங்கே தந்துள்ளோம்) பைத்தியம் போல் நடித்துக் கொண்டிருந்த பரதன் தன் உடம்பு பற்றி உணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகின்ற காலத்தில் ஒரு வயலில் அமர்ந்திருந்தான். காளிக்கு பலியிடுவதற்காக ஒரு சூத்திரன் தன் ஆட்களை ஏவி ஒருவனைப் பிடித்து வரச்சொன்னான். அவர்கள் ஒரு இளைஞனைப் பிடித்துச் சூத்திரனிடம் கொண்டு செல்கையில், இரவு நேரத்தில் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான். என்ன செய்வது என்று அறியாது திகைத்த அப்பணியாளர்கள் பரதனைப் பார்த்தவுடன் அவனை அழைத்துச் சென்றனர். சூத்திரனிடம் கொண்டு போய் நிறுத்திய வுடன் அவனைக் குளிப்பாட்டித் தூய்மையான உடை அணிவித்து பலிக்குத் தயாராக்கினர். இத்தனை நிகழ்ந்தும் பரதன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண் டிருந்தான். பலி இடும் பூசாரி அவன் கழுத்தை வெட்டு வதற்காக அரிவாளை ஒங்கியவுடன் அது பொறுக்காத காளி தேவி வெளிப்பட்டு பலிபூசை செய்ய வந்த அனைவரையும் கொன்றுவிட்டாள். இந்த அதிசயம் கூடப் பரதனுடைய மனத்தில் எவ்வித உணர்ச்சியையும் உண்டாக்கவில்லை. தேகத்தை மறந்து வாழ்ந்த இந்த ஞானி சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, பழைய இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். மனிதனாக இருந்தும் உடம்பின் உணர்ச்சி (தேகப் பிரக்ஞை இல்லாமல் ஜடப் பொருள் போல் இருந்தமையால் இவனுக்கு "ஜடபரதன்” என்ற பெயர் வழங்கலாயிற்று.