பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


218 பதினெண் புராணங்கள் விருத்ராகரன் கதை முன்னொரு காலத்தில் இந்திரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். சுற்றித் தேவர்கள் மற்ற இருக்கைகளில் இருந்தனர். கந்தர்வர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இந்த இன்பத்தில் ஆழ்ந்து இந்திரன் தன்னை மறந்திருந்தான். அப்போது தேவகுருவான பிரகஸ்பதி உள்ளே நுழைந்தார். எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். இன்ப போதையில் இருந்த இந்திரன் குருவின் வரவைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆச்சார்ய பீடத்திற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைத் தாங்காத பிரகஸ்பதி திரும்பிச் சென்று விட்டார். அவர் போன பிறகுதான் இந்திரனுக்குத் தான் செய்த மாபெரும் தவறு மனத்தில் பட்டது. இந்த அபச்சாரம் எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்த இந்திரன் அவரை எப்படியாவது தேடிப்பிடித்து அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று புறப்பட்டுப் போனான். இந்திரனுடைய கர்வத்திற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த பிரகஸ்பதி தன் அதீதமான ஆற்றலைப் பயன்படுத்தி மாயமாய் மறைந்து விட்டார். குருவை எங்குத் தேடியும் காணாமையால் கிலி பிடித்த இந்திரன் தன் இருக்கைக்கு வந்து விட்டான். நாட்கள் சென்றன. தேவகுரு காணாமல் போன செய்தி எங்கும் பரவிற்று. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அசுரர்கள் தேவலோகத்தின் மீது படையெடுத்து அவர்களை நையப் புடைத்து விரட்டி விட்டார்கள். அடி பொறுக்க மாட்டாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறை யிட்டனர். பிரம்மன், அகங்காரத்தால் வந்த இந்தக் குற்றத்திற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார். தேவர்கள் தங்களுக்கு உய்கதியே இல்லை என்று அழுது வேண்ட, 'துவஷ்டா என்ற முனிவரின் மகனாகிய விசுவரூபாவையே