பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 219 தற்காலிக குருவாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று உபதேசம் செய்தார். தேவர்கள் விசுவரூபாவிடம் சென்று பிரம்மன் பணித்ததையும், தங்கள் வேண்டுதலையும் முன் வைத்தார்கள். விசுவரூபா அவர்களின் வேண்டுதலை ஏற்று தேவகுருவின் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. விசுவருபனின் தந்தை துவஷ்டா அசுரப் பெண்ணாகிய ஈசனாவை மணந் திருந்தார். விசுவரூபன் முனிவனாயினும், அவனுடைய சித்தி தைத்திய குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். எனவே, இந்திரனைப் பொறுத்த மட்டில் விசுவரூபாவை முழுவதும் நம்பத் தயாரில்லை. என்றாலும் விசுவரூபாவின் வருகையால் தேவர்கள் அசுரர்களை ஜெயித்து விட்டனர். விசுவரூபாவின் உதவியால்தான் தேவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது என்றாலும், இந்திரன் விசுவரூபாவினை நம்பாமல் இருந்தான். . விசுவரூபாவிற்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தலை உண்ணவும், மற்றொரு தலை பருகவும் பயன்பட்டன. மூன்றாவது தலை யாகங்களில் கிடைக்கும் சோம ரசத்தைக் குடிப்பதற்கென்றே பயன்பட்டது. தேவர்கள் ஜெயித்த நிலையில் அந்த வெற்றிக்கு உதவிய விசுவரூபாவின் மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டி விட்டான். விசுவரூபாவின் தந்தையாகிய துவஷ்டா, இந்திரனின் நன்றி கொன்ற செயலைக் கேள்விப்பட்டு, இந்திரனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் நடத்தினான். அந்த வேள்வியில், விண்ணையும் மண்ணையும் தொட்டுக் கொண்டு ஒரு பூதம் வந்தது. மலைபோன்ற மேனியும், மூன்று உலகங்களையும் விழுங்கக் கூடிய வாயும், நெருப்பை உமிழக் கூடிய கண்ணும் உடையவனாக விருத்ரா சுரன் என்ற பெயருடன் தோன்றினான். அந்த பூதம் என் பணி என்ன? என்று துவஷ்டாவைக் கேட்டது. இந்திரனையும்