பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகவத புராணம் 221 தால் தாக்கினான். ஐராவதம் இரத்தம் கக்கிக் கொண்டு நின்றது. இதே சூலாயுதத்தால் இந்திரன் கையிலிருந்த வஜ்ராயுதத்தைக் கீழே விழும்படி செய்தான். கையில் ஆயுதம் இன்றிப் பரிதாபமாக யானைமேல் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்து, "கோழை இந்திரா! ஏன் நடுங்குகிறாய்? எனக்கு உயிர்துறந்து விஷ்ணுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்து விட்டது. உடனே வஜ்ராயுதத்தை எடுத்து என்னைக் கொன்றுவிடு. மகிழ்ச்சியோடு இறந்து விஷ்ணுவிடம் போகப் போகிறேன்” என்றான். அவன் கூறிய படியே வஜ்ராயுதத்தை எடுத்து விருத்ராசுரனைக் கொன்று விட்டான் இந்திரன். இந்திரனின் பகை முடிந்தது. ஆனால் பாவம் பற்றிக் கொண்டது. விருத்ராசுரன் துவஷ்டாவினால் உண்டாக்கப் பட்ட பிராமண அசுரன். அந்த பிராமணனைக் கொன்ற 'பிரம்ம ஹத்தி தோஷம் இந்திரனைப் பற்றிக் கொண்டது. எங்கு சுற்றியும் அந்தத் தோஷத்தைப் போக்கமுடியாத இந்திரன் மானசரோவருக்குச் சென்று அங்குள்ள தாமரை மலர் ஒன்றின் தண்டில் ஒளிந்திருந்தான். தண்டில் ஒளிந்திருந்த காலத்தில நகுசன் இந்திரப் பதவியில் இருந்தான். சித்ரகேது சாகும் தருவாயில் இருந்த பரிட்சித்து மன்னன் பாகவத புராணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த சுகதேவ முனிவரைப் பார்த்து, முனிவரே! விருத்ராசுரன் இந்திரனைப் பார்த்து என்னைச் சீக்கிரம் கொன்றுவிடு. நான் விஷ்ணுவிடம் போக வேண்டும் என்று கூறினான் என்றீர்கள். ஒர் அசுரனுக்கு இவ்வளவு விஷ்ணுபக்தி எவ்வாறு வந்தது? என வினவினான். அதுகேட்ட சுகதேவ முனிவர் ‘அரசே! விருத்ரா சுரனின் பழைய பிறப்பை அறிந்தால் உமக்கு இந்தச் சந்தேகம்