பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பதினெண் புராணங்கள் இறிரண்ய கசிபு கதை விஷ்ணு புராணத்தில் விரிவாகத் கூறப்பட்டுள்ளது. அதே கதை இங்கேயும் விரிவாகக் கூறப் படுகிறது. இரண்டு கதையும் ஒன்றாயினும் முடிவு- அதாவது நரசிம்மத்தின் வருகை வெவ்வேறாகக் குறிக்கப்பட்டுள்ளது. பாகவத புராணப்படி தரகிம்மன் துணுக்குள் ஒளிந்திருந்தது என்பதும், விஷ்ணு துணுக்குள் இருக்கிறானா, இதை உடைக் கிறேன் பார் என்று ஹிரண்யன் சொல்வதும், துணை ஹறிரண்யன் அடிக்க நரசிம்மம் வெளிப்பட்டு அவனைக் கொன்றது என்பதும் அறியக் கிடக்கின்றன) கஜேந்திர மோட்சம் முன்னொரு காலத்தில் திரிகுடா என்ற பெரிய மலைத் தொடர் கடல் வரை நீண்டிருந்தது. மிக அடர்த்தியானதும், உயரமானதுமாகிய காடு. அம்மலையில் நிறைந்திருந்தது. அக்காட்டில் பல யானைகளுக்குத் தலைவனாகிய ஒர் ஆண் யானை ஆட்சி செய்து வந்தது. ஒரு நாள் அம்மலையில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றது. நீருக்குள் இருந்த முதலை இந்த யானையின் காலைப் பற்றிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் யானை தன் காலை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. யானையைத் தண்ணிருக்குள் இழுக்கும் சக்தி முதலைக்கு இல்லை. இந்தப் போராட்டத்தில் நெடுங்காலம் சென்றது. பலங் குறைந்த யானை விஷ்ணுவை தியானிக்கத் தொடங்கியது. உடனே விஷ்ணு தோன்றிச் சக்கரத்தால் முதலையின் வாயை அறுத்து யானைக்கு விடுதலை தந்தார். கொலையுண்ட முதலை பழம்பிறப்பில் ஹீஹீ என்ற கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாகப் பிறந்தான். விஷ்ணுவால் சாப விமோசனம் ஏற்படும் என்று முனிவரே கூறியிருந்தார். அதுபோல் இப்பொழுது நடந்தது.