பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 225 இந்த யானையும் முற்பிறப்பில் இந்திரத் தூய்மனன் என்ற மன்னனாக இருந்தவன். ஒரு முனிவரின் சாபத்தால் யானை யாகப் பிறந்திருந்தான். (பாற்கடல் கடைந்த கதை : இக்கதை விஷ்ணு புராணத்தில் பேசப்பட்டுள்ளபடியே இங்கும் இடம் பெறுகிறது. ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி பேசப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் விஷவாயு ஆகாயம் வரை பரவியது என்று கூறப்படுகிறது. பாகவத புராணத்தில் விஷம் ஆலகாலம் என்ற பெயருடன் தோன்றியது என்றும், இந்த விஷத்தைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர், அசுரர் அனைவரும் சிவபிரானிடம் சென்று முறையிட அவர் அந்த ஆலகாலத்தை எடுத்துக் குடித்து விட்டார் என்றும், அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர் கழுத்து மட்டும் நீலநிறமாகி விட்டபடியால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வழங்கப் படுகிறது என்றும், அவர் விஷத்தைக் குடிக்கும் பொழுது சிந்திய விஷத்தைப் பாம்பு, தேள் முதலியவை தாம் எடுத்துக் கொண்டன என்றும் கூறப்படுகிறது. அசுரர்களுக்கு மறுக்கப்பட்ட அமிர்தத்தை ராகு என்ற அசுரன் திருடி உண்ணும் பொழுது, விஷ்ணுவால் அவன் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ராகு உண்ட அமிர்தம் அவன் தலை துண்டிக்கப்பட்டதால் அவன் உடலில் இறங்கவில்லை. ஆனால் அவன் வாயில் அமிர்தம் இருந்ததால் தலைமட்டும் அமரத்துவம் பெற்றுவிட்டது. அதனை பிரம்மா கோள்களுள் சேர்த்து விட்டார்). (மச்ச அவதாரம் : விஷ்ணு புராணத்தில் மச்ச அவதாரக் கதை சொல்லப்பட்டதற்கு மேல் இங்கு பேசப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி வேதங்களை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ւ.ւկ.-15