பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 227 விஷ்ணுவின் சக்கரம் வந்து அந்த அசுரனைக் கொன்று விட்டு, துர்வாசனையும் துரத்த ஆரம்பித்தது. சக்கரத்துக்கு பயந்த துர்வாசர் எங்கெல்லாமோ ஒடிக் கடைசியாக விஷ்ணுவின் காலடியில் போய் விழுந்தார். விஷ்ணு, 'துர்வாசரை மன்னித்து, சக்கரத்திலிருந்து காப்பாற்றும் சக்தி அம்பரீஷன் ஒருவனிடம்தான் உள்ளது” என்று கூறினார். துர்வாசர் ஓடிவந்து அம்பரீஷனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அம்பரீஷன் அவரை மன்னித்து அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சக்கரத்தை வேண்டிக் கொண்டான். சக்கரம் துர்வாசரை விட்டு விஷ்ணுவிடம் சென்றுவிட்டது. யயாதி இருவரை மணந்த கதை அசுரர்களுக்கு அரசனான விருஷபர்வாவிற்கு சர்மிஷ்டா என்ற மகள் இருந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரிக்கும் தேவயானி என்றொரு பெண் இருந்தாள். இவர்கள் இருவரும் தோழிகள். ஒருமுறை இருவரும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்தபிறகு கழற்றிவைத்த உடைகளை அணியும் பொழுது, குருவின் மகளாகிய தேவயானியின் உடையை தவறுதலாக சர்மிஷ்டா அணிந்து கொண்டாள். இதைக் கண்டு பொறாத தேவயானி 'குருவின் மகளாகிய யான் உங்களைவிட உயர்ந்தவள். என்னைவிடத் தாழ்ந்தவளாகிய நீ எப்படி என் உடையை அணியலாம்? என்று கேட்டாள். இதைக்கேட்ட சர்மிஷ்டா. 'என் தந்தை அரசன் என்பதை மறந்து விடாதே! அரசன் போடுகிற சாப்பாட்டில்தான் குருவும் வயிறு வளர்க்கிறார். எனவே அரசன்தான் உயர்ந்தவன். உன்னைவிட நானே உயர்ந்தவள்’ என்று கூறிவிட்டு, சுக்ராச்சாரியார் மகள் தேவயானியைக் கிணற்றில் தூக்கிப்