பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகவத புராணம் 231 புரிந்தனர். கதாயுதம் தூள் தூளாகப் போயிற்று. பிறகு அவர்கள் மற்போரில் ஈடுபட்டனர். இருபத்தியோரு நாட்கள் பகல் பொழுதெல்லாம் மற்போர் நடைபெற்றது. இரவில் சகஜமான நண்பர்களைப் போல் இருந்தனர். பீமனால் ஜராசந்தனைக் கொல்ல முடியவில்லை. இதற்கான காரணம் ஒன்று உண்டு. விருகதரதா என்ற மன்னனின் மனைவிக்குப் பிரசவ காலத்தில் குழந்தை பிறக்காமல் இரண்டு தசைப் பிண்டங்கள் பிறந்தன. வெறுத்துப்போன அவள் அந்த இரண்டு துண்டங்களையும் குப்பையில் வீசிவிட்டாள். ஜரா என்ற ராட்சசப் பெண் இந்தப் பிண்டங்களைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துக் கொண்டுபோய் இரண்டு பிண்டங்களையும் ஒன்றாகச் சேர்த்து அதற்கு உயிர் உண்டாக்கினாள். சந்தி' என்றால் இரண்டு ஒன்றாகச் சேர்வது என்பது பொருள். ஜரா வளர்த்ததனால் 'ஜராசந்தன்' என்ற பெயர் பெற்றான். இந்தப் பிறப்பு ரகசியத்தை அறிந்திருந்த கிருஷ்ணன் பீமனுக்கு மறுநாள் போரில் ஜராசந்தனின் இருகால்களையும் பிடித்து அவனை இரண்டாகப் பிளந்து எறியச் சொன்னான். பீமன் அவ்வாறே செய்ய ஜராசந்தன் இறந்தான். ஜராசந்தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, ஜராசந்தனால் சிறைப்பிடிக்கப்பட்ட இருபதாயிரத்து எண்ணுறு சிற்றரசர் களை விடுதலை செய்தார்கள். சிசுபாலன் முடிவு யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட பொழுது பல தேசத்து அரசர்களும் முனிவர்களும் அங்குக் கூடி யிருந்தனர். கூடி இருந்த அரசர்களுள் சிசுபாலனும் ஒருவன். அவன் வசுதேவரின் சகோதரியாகிய சிருத்தசர்வா' என்பவளின் மகனாவான். எனவே இவன் கிருஷ்ணனின்