பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பதினெண் புராணங்கள் அத்தை மகனாவான். இந்த உறவிருந்தும், கிருஷ்ணனை யாதவன் என்றே ஏசினான். யுதிஷ்டிரன், யாருக்கு முதல் அர்க்கியம் கொடுக்க வேண்டும் என்று சபையில் உள்ள பெரியவர்களைக் கேட்டபொழுது, அவர்கள் ஒருமுகமாக “கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை” என்றனர். யுதிஷ்டிரன் அதனைச் செய்தவுடன், சிசுபாலன் எத்தனையோ அரசர்கள் இருக்கும் இந்த அவையில் ஒரு இடையனுக்கு முதல் மரியாதை செய்வது நியாயமில்லை என்று கூறிக் கிருஷ்ணனை வாயில் வந்தபடி ஏசத் தொடங்கினான். தன் அத்தைக்குக் கொடுத்த வாக்குப்படி சிசுபாலன் அவதூறுகளை எண்ணிக் கொண்டே வந்த கிருஷ்ணன் சக்கரத்தால் சிசுபாலன் கழுத்தை வெட்டினான். சால்வனின் முடிவு சிசுபாலன் இறந்ததும் அவனுடைய நண்பனாகிய சால்வன் யாதவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒர் ஆண்டு முழுவதும் மண்ணையே தின்றுகொண்டு கடுந்தவம் புரிந்தான். இறுதியில் சிவன் எதிர்ப்பட்டதும் யாதவர்களை அழிக்கத் தனக்கு ஒரு விமானம் தேவை என்று வேண்டிக் கொண்டான். தைத்தியர்களில் ஒருவனாகிய மாயா என்பவனைக் கொண்டு இரும்பாலான ஒரு ரதத்தைச் செய்யச் சொன்னான். அதை வைத்துக்கொண்டு சால்வன் துவாரகை மீது படையெடுத்து அதன் கோட்டை, கொத்தளங்கள் நந்தவனங்கள் ஆகியவற்றை அழித்தான். கிருஷ்ணன் அப்போது அங்கில்லாததால் கிருஷ்ணனின் மகன் பிரத்யுமநன் சால்வனுடன் பெரும்போர் செய்தான். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பினான். பிரத்யுமநன் போருக்குச் செல்வதைத் தடுத்துத் தானே சென்று கதாயுதத்