பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 233 தால், சால்வனின் தேரை அடித்து உடைத்துவிட்டுச் சக்கரத்தால் அவனைக் கொன்றான். யூரீதமா (குசேலர்) கதை கிருஷ்ணன் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்ற காலத்தில் உடன் கற்றவன் பூரீதமா என்ற பிராமணன். பூரீதமாவின் குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது. உண்ண உணவோ, உடுக்க உடையோ இன்றி அவர்கள் வருந்தினர். திடீரென்று ஒருநாள் பூரீதமாவின் மனைவி கணவனைப் பார்த்து, “உங்கள் பால்ய தோழனான கிருஷ்ணன் இப்பொழுது மிகுந்த வசதியுடன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டோமே, அவனிடம் சென்று நம் கஷ்டத்தைச் சொன்னால் நிச்சயம் அவன் உதவுவான். ஏன் நீங்கள் போகக் கூடாது?” என்று கேட்டாள். அதற்குடன்பட்ட ரீதமா, நண்பனுக்கு ஏதாவது ஒரு பரிசினைக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்து ஒன்றும் இல்லாமையால் இரண்டு பிடி அவலை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றான். பெருமகிழ்ச்சியுடன் அவனை வரவேற்ற கிருஷ்ணன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, "இவ்வளவு நாட்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தாயே, எனக்கு என்ன கொண்டு வந்தாய்?” என்று கேட்டான். கிருஷ்ணனின் அரண்மனை யையும், அதில் உள்ள பொருள்களையும் கண்டுவிட்டு பூரீதமா, தான் அவல் கொண்டு வந்திருப்பதைச் சொல்ல வெட்கப் பட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். ஆனால் கிருஷ்ணன் அவல் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே அந்த இரண்டுபிடி அவலையும் தின்றுவிட்டான். இரவு நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நல்ல உடை உடுத்திக் கொண்டு அன்று இரவு பூரீதமா அங்கேயே தங்கி விட்டான். மறுநாள் காலை எதற்காக வந்தோம் என்று சொல்வதற்கே