பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாகவத புராணம் 235 பைத்தியக்காரா! போயும் போயும் சிவனையா நம்புகிறாய். அவர் வரம், சாபம் இரண்டும் ஒரு பலனையும் தராது. நான் சொல்லுவதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே கையை வைத்துப்பார். ஒன்றுமே நடைபெறாது' என்று கூறினார். அறிவற்ற மூடனாகிய விருகா தன் தலையில் தன் கையை வைத்த உடனே இறந்து போனான். பிருகு செய்த சோதனை ஒரு காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் மேம்பட்டவர்கள் என்ற சந்தேகம் எழுந்தது. அவர்களை மூவர் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அவர்களுள் ஒருவர் உயர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும். அது யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆராய்ச்சி செய்து கடைசியில் பிரம்மாவின் மகனான பிருகுவை இதைத் தெரிந்து வர அனுப்பினார்கள். பிருகு தந்தையாகிய பிரம்மா வரும் பொழுது எழுந்து மரியாதை செய்யாமல் உட்கார்ந்து கொண்டே இருந்தான். பிரம்மாவிற்குக் கோபம் வந்தாலும், தன் பிள்ளை என்பதால் பேசாமல் இருந்தார். சிவனிடம் சென்றார். அவர் அவரை அனைத்துக் கொள்ள வந்த பொழுது பிருகு சிவனை வாயில் வந்தபடி ஏசினார். திரிசூலத்தை எடுத்து பிருகுவின் மேல் எரியப் போகும் பொழுது பார்வதி தடுத்து விட்டாள். விஷ்ணுவிடம் அடுத்து சென்றார். விஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தார். பிருகு அவரின் மார்பில் எட்டி உதைத்தார். விழித்த விஷ்ணு உத்தமமான பிராமணரே! தங்களுடைய பாதம் என் மார்பில் பட நான் புண்ணியம் செய்திருக்கிறேன். இந்தப் பாதத்தின் அடையாளத்தை எப்பொழுதும் என் மார்பில் தாங்குவேன்' என்று சொன்னார். பிருகு தேவர்களிடம் வந்து நடந்தவற்றைக் கூறவும், விஷ்ணுதான் உயர்ந்தவர் என்று முடிவு செய்தனர்.