பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பதினெண் புராணங்கள் யார் குரு ? யாதவகுலத்தின் முதல்வனாகிய யாது ஒருமுறை மிகவும் கற்றவனாகிய ஒரு இளைஞனைப் பார்த்தான். “இந்த வயதில் இவ்வளவு கற்றிருக்கிறாயே உன் குரு யார்?" என்று கேட்டான். அந்த இளைஞன் கற்றுக் கொள்வதற்குக் குறிப்பாக ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும் என்ற தேவை இல்லை. இதோ பார். இந்தப் பூமியின் மேல் ஆயிரக் கணக்கானோர் தம் பாதங்களால் இந்தப் பூமியை மிதித்துக் கொண்டே இருக்கின்றனர். பொறுமையோடு அத்தனை பேரையும் மன்னித்து விடுகின்றது பூமி. பூமியிலிருந்து மன்னிக்கும் குணத்தை நாம் தெரிந்து கொள்கிறோம். காற்றைப் பார். எல்லா உயிர்களுக்கும் மூச்சுக் காற்றாக உள்சென்று வெளி வருகிறது. ஆனால் எதனோடும் ஒட்டிக் கொள்வதில்லை. இதிலிருந்து பற்றற்று வாழும் வழியை அறிந்து கொள்ளலாம். ஆகாயத்தைப் பார். மேகங்கள் மூடுகின்றன. பிறகு வெளி வருகின்றன. எதனாலும் ஆகாயம் பாதிக்கப்படுவதில்லை. எந்த ஒன்றும் நம்மை பாதிக்காமல் இருப்பதை ஆகாயத்தின் மூலம் கற்றுக் கொள்ளவேண்டும். நீரைப் பார். இது அனைத்தையும் சுத்தம் செய்ய உதவுகிறது. தண்ணிரிலிருந்து தூய்மை செய்வதன் அவசியத்தை அறிந்து கொள்ளவேண்டும். நெருப்பைப் பார். நெருப்புக்கு என்று தனியான வடிவம் இல்லை. எந்தப் பொருளைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவமாக நெருப்பு ஆகிவிடுகின்றது. பரமாத்மாவுக்குத் தனியே வடிவமில்லை. அதுபோல பரமாத்மாவும் எதைப் பற்றி நிற்கின்றதோ அந்த வடிவத்தைப் பெறுகின்றது. சந்திரனைப் பார். அது பிறைகள் தேய்வதாகவும், வளர்வதாகவும் தெரிகிறது. உண்மையில் அப்படி ஒன்றும் நடைபெறுவதில்லை. மேல் தோற்றத்தைக் கண்டு எதையும் நம்பிவிடக் கூடாது என்பதை சந்திரனிலிருந்து அறிந்து