பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 237 கொள்கிறோம். ஆத்மனுக்கு எவ்விதமான மாற்றமும் ஏற்படுவ தில்லை. ஏற்படுவதாக நினைப்பது ஒரு மாயையே ஆகும். சூரியனைப் பார். கோடையில் சமுத்திரத்திலிருந்து எடுக்கின்ற நீரை, மழைக்காலத்தில் தந்து விடுகின்றது. கற்றவர்கள் பொறி புலன்களால் அனுபவிக்கும் அனுபவங் களைத் திருப்பித் தந்துவிடுகின்றனர். தாங்களே அதை வைத்துக் கொள்வதில்லை. இதுபோன்ற குருமார்கள் எங்கும் நிறைந்திருப்பதால் அவ்வவற்றிலிருந்து ஒவ்வொரு பாடத்தை அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை அறிந்து கொள்வதற்குத் தனியாக ஆசிரியர் என்ற பெயரில் ஒருவர் தேவையில்லை. பிராமணன் யார்? மாளவ தேசத்தில் பெருஞ் செல்வத்துடன் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். வேளாண்மை, வாணிபம் என்ற இரண்டின் மூலமாகப் பெருஞ் செல்வத்தைச் சேர்த்த அவன் யாருக்கும் எந்த உதவியும் செய்யாத பரம உலோபியாக வாழ்ந்து வந்தான். நாளாவட்டத்தில் அவன் செல்வம் கரைந்தது. எஞ்சியதைத் திருடர்கள் கொண்டுபோய் விட்டனர். அந்தப் பிராமணன் சிந்திக்கலானான். என்னுடைய வாழ்க்கை எதைச் சாதித்தது? இந்தப் பொருட்களை எல்லாம் சதம் என்று எண்ணியது எவ்வளவு தவறு? என்ற சிந்தனையுடன், தனி ஒருவனுக்கு வேண்டிய சில பொருட்களுடன் ஒரிடம் சென்று துறவியாக வாழத் தலைப்பட்டான். பிச்சை எடுத்து வயிற்றுப் பசியைத் தணித்துக் கொண்டான். சில காலம் கழித்து அவன் வைத்திருந்த ஒன்றிரண்டு சாமான்களும் களவு போயின. அவன் பிச்சை எடுத்து வந்த உணவும் களவாடப்பட்டது. அந்த நிலையிலும் அவன் யாரையும் குறை கூறவில்லை. இப் பொருள்களில் எல்லாம் பற்று நீங்கி, பொறிபுலன்கள் அவன்