பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பதினெண் புராணங்கள் வசப்பட்ட போது எதுபற்றியும் கவலைப்படாமல் இருக்கப் பழகிக் கொண்டான். நாளடைவில் அவன் பிரம்ம ஞானத்தைப் பெற முடிந்தது. இப்படிப் பற்றற்ற வாழ்க்கை வாழும் பிராமணனே பரப்பிரம்மத்தை அறிய முடியும். கலியுகமும் ஆள்பவர்களும் - பாகவத புராணத்தை சுகதேவமுனிவர் சொல்லி முடிக்க கேட்டுக்கொண்டிருந்த பரிட்சித்து, கலி தொடங்கிவிட்டது என்றீர்கள். இந்த யுகத்தில் எந்தெந்தப் பரம்பரை ஆட்சி செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். கிருஷ்ணன் இறந்த பொழுதே கலியுகம் தொடங்கி விட்டது. அவருக்குப் பின் பிரத்யோத பரம்பரை ஆட்சிக்கு வரும். இதில் 5 அரசர்கள் நூற்றிமுப்பத்தெட்டு ஆண்டுகாலம் ஆட்சி நடத்துவர். சிசுநாக பரம்பரையில் பத்து மன்னர்கள் முந்நூற்றி அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள். நந்தா என்ற சூத்திரன் அரசாட்சி ஏற்று 100 ஆண்டுகள் ஆள்வான். அவனும் அவனது எட்டுப் பிள்ளைகளும் சாணக்கியன் என்ற பிராமணனால் அழிவை எய்துவர். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்குவான். இந்தப் பரம்பரையில் 10 மன்னர்கள் 137 வருடங்கள் ஆட்சி புரிவர். மெளரிய பரம்பரையில் கடைசி மன்னனான விருகதரதா, அவனுடைய சேனாதிபதி புஷ்யமித்ரா என்பவனால் கொல்லப்படுவான். இதிலிருந்து சுங்கவம்சத்தின் 10 மன்னர்கள் நூறு ஆண்டு களுக்குமேல் ஆட்சி செய்வர். கன்வர் பரம்பரை 345 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதன் பிறகு 456 ஆண்டுகட்கு ஆந்திர மன்னர்கள் ஆள்வர். இதன் பிறகு பல வம்சங்களைச் சேர்ந்த பல மன்னர்கள் பல பகுதிகளைப் பிடித்து ஆள்வர். அவர்கள் அனைவரும் தீயவர்களாகவே இருப்பர். நாடு துண்டாடப்படும்.