பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi ஆனால் இந்தச் சூதர்களைப் பற்றிச் சொல்லவரும் திரு. குல்கர்னி தாம் பதிப்பித்த The Puranas’ என்ற நூலின் இரண்டாவது பகுதியில் 41ஆம் பக்கத்தில் சூதர்கள் என்பவர்கள் பிராமணத் தந்தைக்கும் சூத்திரர் இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகளும், அறியாமை காரணமாகச் செய்யப்படும் தவறுகளும் புராணங்களின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக Ꮽ❍ ☾ITᏊYYᎶᏈᎢ. பதினெட்டுப் புராணங்களைத் தமிழில் சுருக்கி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் அநேகமாக எல்லாப் புராணங்களும் மூலநூல் மறைந்துவிட்டபடியால் புதிதாகப் படைக்கப்பட்டன என்று முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் மிகச் சிறப்புடைய தாகும். உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், தேவ காண்டம், யுத்த காண்டம் என்ற பகுதிகளையுடைய கந்த புராணத்தை ஸ்காந்தத்திலிருந்து பெறப்பட்டது என்று பலர் கூறுவர். வடமொழி ஸ்கந்த புராணத்தில் முதல் பகுதியில் உள்ள சங்கர சம்ஹிதையில் உள்ள முதற்காண்டமாகிய சிவரகஸ்ய காண்டம் என்ற பகுதியே கச்சியப்பருக்கு மூலமாகும். வடமொழிப் புராணங்கள் தமிழ் நாட்டில் மூலத்திலோ, மொழிபெயர்ப்பிலோ அதிகம் வழங்கவில்லை. அது ஏனென்று தெரியவில்லை. அது அதிகம் வழங்கப் படாமையின் இப்புராணங்கள் அனைத்தும் ஒன்றிரண்டு தவிர தமிழில் மொழிபெயர்க்கப்படவும் இல்லை. தமிழ்க் கந்த புராணம் வடமொழி மூலத்தைத் தழுவிய புதுப் படைப்பாகும். கம்பனுடைய இராம காதையைப் போல இதுவும் ஒரு முயற்சியாகும்.