பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பதினெண் புராணங்கள் பாடல்களின் சுருக்கமான வரலாற்றை இப்புராணம் விரித்துரைக்கிறது. இதனால் அந்தந்தப் புராணங் களில் எவ்வளவு இடைச்செருகல்கள் பிற்காலத்தில் புகுந்துள்ளன என்பதை அறிய இப்புராணம் உதவுகிறது. நாரத, அக்னி, கருட புராணங்கள் மூன்றும் ஒரு களஞ்சியம் போல் பற்பல விஷயங்களையும் அறிய உதவுகின்றன. பல்வேறு சடங்குகளைச் செய்யும் முறை இப்புராணங்களில் விரித்துப் பேசப்படுகிறது. இப் புராணம் விஷ்ணுவே சிவம் என்றும், சக்தி என்றும் பேசுவதால் குறுகிய நோக்கம் உள்ள சமய நூல் அன்று என்று தெளிய உதவுகிறது. நாரதர் பிரம்மனின் மனத்தில் பிறந்த மகனாவார். ஒயாது நாராயணனின் பெருமையைப் பாடிக்கொண்டு உலகம் சுற்றுபவராகப் பேசப்படுகிறார். கீர்த்தனைகள் என்று இன்று வழங்கப்படும் பாடல் முறையை முதலில் தோற்றுவித்தவர் நாரதரே ஆவார். எல்லா தெய்வங்கள் பற்றியும் அவர் தோற்றம், இயல்பு செயல்கள் என்பவை பற்றிக் கீர்த்தனை வடிவில் நாரதர் பாடுவதாகப் பல பாடல்கள் உள்ளன. கீர்த்தனை என்பது ஒரு தனி மனிதனின் இசைக் கச்சேரியாகும். இதன் பயன் சொல்லப்பட்ட விஷயங்கள் பொது மக்களை ஈர்க்கும் வகையில் அமைவதாகும். நாரத புராணத்தில் உள்ள கீர்த்தனைகள் பிற்காலத்தில் பவ கீர்த்தனைக்காரர் களை உருவாக்கிற்று. எழுத்தறிவில்லாதவர்கள் கூடக் கீர்த்தனைகளை இயற்றவும், செவி வழியாகக் கேட்ட கீர்த்தனைகளைப் பாடவும் பழகி இருந்தனர். கிராமம் கிராமமாகச் சென்று இறைவன் புகழ்பாடும் கிர்த்தனை களைப் பாடிப் பொதுமக்களைக் கவர்ந்தனர். இப்படிப் பாடும் இவர்களில் தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்தவர் களாகக் கூடப் பலர் இருந்தனர். இவ்வாறு பாடும் இவர்களுக்கு நாரதர்கள் என்ற பெயர் வழங்கிற்று.