பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நாரத புராணம் 243 இதில் ஒரு வியப்பென்னவென்றால், நாரதர்கள் என்ற பெயருடன் இவர்கள் பாடும்பொழுது பிராமணர்கள் உள்பட பலரும் இவர்களை வணங்கி வரவேற்றனர். வியாசர் வால்மீகி, சுகர் ஆகிய மகான்களைப் பற்றிப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு இந்த நாரதர்களிடையே இருந்து வந்தது. ஆதிநாரதர், வேதங்கள் முதலானவற்றின் உட்பொருளை எல்லாம் கீர்த்தனை வடிவில் வெளியிட்டதுடன் இறையன்பு, இறைபக்தி முதலியவற்றை மக்கள் மனத்தில் தோற்று விக்கும் பெரிய ஆசிரியராக இருந்தார். நாரத பாஞ்சராத்திரம் என்ற நூல் இறைவனுக்கு செய்யும் தொண்டைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அத்தகைய நூலின் ஆசிரியர் நாரதர் என்று சொல்லப்படுகிறது. உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெருமுயற்சி செய்து தாங்கள் விரும்பும் பொருளை அடைய விரும்புகிறார்கள். இந்த முயற்சியின் பயன், 'பொருளை அடைவது என்றே பலரும் கருதினர். நாரத பாஞ்சராத்திரம் அடைகின்ற பயனைப் பற்றிக் கவலைப்படாமல் இறைவனிடத்து அன்பு செலுத்து வதையே பெரிதாகக் கூறுகிறது. பொருளை அடைய விரும்பி முயற்சி செய்பவர்கள் அந்த முயற்சிக்குப் பலன் கிட்டாதபோது பெரும் வருத்தமும், ஏமாற்றமும் அடைகிறார்கள், முயற்சியையே கூட விட்டு விடுகிறார்கள். இதன் எதிராக பலனைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்களைச் செய்தால், ஏமாற்றத் திற்கு வழியே இல்லை. மனமகிழ்ச்சியும் குறையப் போவதில்லை. இதனையே நாரதர் உபதேசிக்கிறார். பிரம்மனின் மானசீக புத்திரராகிய நாரதர் எல்லோரையும் போலத் திருமணம் செய்துகொண்டு சந்ததியை வளர்க்க வேண்டும் என்று எண்ணினார்கள். ஆனால் நாரதர் அதற்கு இடம் கொடாமல், வினை